திங்கள், 19 அக்டோபர், 2015

Oil Pulling

ஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்


ஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை ஆனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நம் முன்னோர் பல வியக்கத்தக்க கலைகளை நமக்கு  கொடையாக வழங்கி சென்று உள்ளார்கள் அதை இன்று பல மேலை நாடுகள் ஆய்வுகள் என்ற பெயரில் தமதாக்கி கொண்டு வருகிறது தமிழர்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என்றுதான் புரிய வில்லை. சரி செய்திக்கு வருவோம். இந்த எண்ணெய் கொப்பளித்தல் நமது முன்னோர் தொண்டை பகுதி தூய்மையாக்கல் என்ற பெயரில் வழங்கி வந்த ஒரு முறையாகும் .

எண்ணெய் கொப்பளித்தல்

இந்த எண்ணெய் கொப்பளித்தளுக்கும் நோய் நீங்குதளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம் மனிதனின் பல்வேறு நோய்களை நீக்க எண்ணெய் கொப்பளித்தல் முறை உதவுகிறது என்பதை மேலை நாடுகள் தமது ஆய்வுகளின் வழி காட்டுகிறது இதை நாம் முறையாக பழகி நாளும் செய்து வந்தால் பல்வேறு நோயில் இருந்து விடுபடலாம் என உறுதியாக கூறலாம்.

எண்ணெய் கொப்பளித்தல் செயல்முறை

தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும் செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும். இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும்.

இந்த வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்கலாம் இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறுவதாக ஆய்வில் தெரிவிக்கின்றனர்.


எண்ணெய் கொப்பளிப்பதால் உண்டாகும் சிறப்புகள் .
எண்ணெய் கொப்பளிப்பதால் செய்வதால் உணவு கட்டுப்பாடு ஏதும் செய்ய தேவையில்லை எந்த பின் விளைவும் இல்லை என்பது இனிப்பான செய்தி.   எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை (இப்படி பட்டவர்கள் காலையில் கழிவறைக்கு செல்கையில் செய்யலாமே) என்பார்களும் இருக்கிறார்கள்   அதாவது வேறு யாருக்காகவோ செய்வது போல அவர்கள் அல்ல நமதுஇலக்கு நோயின்றி இருக்க வேண்டும் என எண்ணுகிறவர்கள் நமது இலக்கு. இந்த எண்ணெய் கொப்பளிப்பதால் பல்வேறு நோய்கள் நீங்குவத மருத்துவ வல்லுனர்கள் கூறு கின்றனர். புற்று நோய் கூட கட்டுபடுகிறது என்கிறார்கள் 

எண்ணெய் கொப்பளித்தல் (Oil pulling ) செய்வதால்

நல்ல உறக்கம் உண்டாகிறது
பல் நோய்கள் விலகுகிறது  பற்கள் வெண்மை நிறமடைகிறது.

வாய் புண் நீங்குகிறது.

வாயு தொந்தரவு நீங்குகிறது.

தசை நோய்கள் குணமாகிறது.

மார்பு நோய் நீங்குகிறது.

நெஞ்சக சளி நீங்குகிறது

இரைப் பிருமல் நீங்குகிறது .

முதுகு வலி குறைகிறது .

இதய நோய்கள் நீங்குகிறது .

காதுநோய்கள் 
குணமாகிறது. 

கண் நோய்கள் சரியாகிறது.

குடல் தொடர்பான நோய்கள் நீங்குகிறது.

இரத்தம் சம்பந்தமான நோய்கள் 
குணமாகிறது.

மூச்சு குழல் நோய்கள் 
நீங்குகிறது. 

நரம்பு நோய்கள் விலகுகிறது

தோல் நோய்கள் 
குணமாகிறது.

கழுத்து பிடிப்பு நோய்கள் 
நீங்குகிறது. 

மூல நோய்கள் விலகுகிறது

காச நோய்கள் விலகுகிறது

சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது .

பக்கவாத நோய் 
குணமாகிறது.

வலிப்பு நோய்கள் 
சரியாகிறது.

புற்று நோய் கட்டிகள், மாதவிடாய் ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது.



இப்படி பல்வேறு நோய்களை குணபடுத்தும் தன்மையுள்ள  இது அறிவியல் அடிப்படையிலானது எனவே முறைப்படி இதை செய்து நோய் வெல்வோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக