மூலிகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூலிகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 மே, 2021

சங்குப் பூ 




சங்கு பூ, சங்கு புஷ்பம், கருவிளை, காக்கரட்டான், காக்கணம், மாமூலி, கன்னிக் கொடி, சங்கங்குப்பி, சங்க புஷ்பி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்த கொடி வகை செடி. இவற்றின் பூ, இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவகுணங்கள் நிறைந்தது.  

  • வெள்ளை நிற பூக்கள் கொண்ட சங்குப்பூ செடிகள் வேரை கொண்டு கஷாயமாக உட்கொள்ள வெட்டை, தலை நோய், சுரம், பேதி, புண்கள் ஆகியவற்றை போக்கலாம். 
  • ஊதாநிற பூக்கள் உள்ள சங்குப்பூ வேர்களைக் கொண்டு கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய், மூட்டு வலி முடக்குவாதம், தலை பாரம், மலச்சிக்கல் ஆகியவற்றை போக்கலாம். 
  • மருத்துவ குணங்கள் கொண்ட இவற்றின் விதைகள் நல்ல மணமுடையதாகவும், புளிப்பு சுவையையும் கொண்டவை. விதைகளுக்கு சிறுநீரை பெருக்கும் ஆற்றல் உண்டு. மேலும் குடலில் உள்ள பூச்சிகளையும் போக்கும். இலைகள் துவர்ப்பு சுவையை அளிக்கிறது. 
  • இந்த மலர்கள் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள், குழந்தையின்மை தொந்தரவுகள், மலட்டு தன்மை, மாதவிடாய் கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. பால்வினை, வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. 
  • படபடப்பு, ரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும் இந்த சங்குப் பூக்கள் புற்றுநோய்க்கு மருந்தாகிறது. 
  • உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க கூடிய இவை இதயத்திற்கு பலத்தை அளிப்பதோடு, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சமீபத்திய ஆய்வுகள் மாவுச்சத்து உணவுகளை ஜீரணிக்க இந்த சங்குப் பூக்கள் உதவுகிறது என வெளியிட்டுள்ளது.  
  • பொலிவான முகமும், கருகருவென்று கூந்தலும் பெற உதவுகிறது சங்குப் பூக்கள். அதுமட்டுமல்ல என்றுமே இளமையாக உற்சாகமாகவும் இருக்க சங்குப்பூக்களை  உணவாக உண்ணலாம். 
  • உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அபார சத்துக்கள் இந்த சங்குப்பூக்களில் உள்ளது. இன்சுலின் சுரப்பையும் சீராக வைக்க உதவுகிறது. 
  • மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றை போக்கும் மாமருந்தாக பூக்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மன ரீதியான பதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது. 
  • உடலில் ஏற்படும் நெறி கட்டிகள், மூட்டுவலிக்கு, வாத நோய் வீக்கங்களை சங்கு பூ இலை போக்கும் தன்மை கொண்டது.  
  • மலச்சிக்கல், மூலம் உள்ளவர்கள் தொடர்ந்து சங்குப்பூக்களை பயன்படுத்த சிறந்த நிவாரணம் பெறலாம். 
  • குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளில் சங்குப்பூக்களை அவ்வப்பொழுது சேர்ப்பதால் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிக்கும். அதிலும் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வினையும் போக்கும் சிறந்த Memory Plus மருந்து. அதே சமயம், குழந்தைகளுக்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இந்த சங்குப்பூக்களில் தயாரிக்கப்படும் உணவுகளை அளிப்பது போதுமானது. 
  • விளக் கெண்ணெய்யுடன் சங்குப் பூ இலைகளை அரைத்து விழுதை காய்ச்சி தைலமாக தயாரித்துக் கொண்டு மூலத்திற்கு மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.  
  • சுவாச சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல நிவாரணத்தை சங்குப்பூக்களின் தேநீர் அளிக்கும். இதனை வீட்டில் வளர்க்க சுவாச ரீதியான தொந்தரவுகள், மன ரீதியான தொந்தரவுகள் அகலும். இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் கட்ட வீக்கம் கட்டுப்படும். 
  • குழந்தைகளுக்கு ஏற்படும் இருமலுக்கு சங்குப்பூ, இலை கஷாயம் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
  • அதிகமாக சங்கு பூக்கள் கிடைக்கும் காலங்களில் அவற்றை நிழலில் உலர்த்தி காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப நீரிழிவு, இருதய தொந்தரவுகள் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • யானைக்கால் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது இந்த சங்குப் பூ செடிகள். சங்குப்பூ செடியின் பூ, இலை, வேர், கொடி, விதை ஆகியவற்றை அரைத்து பூசிவர யானைக்கால் வீக்கம் குறையும், அதனுடன் இதன் தேநீரை அருந்த விரைவில் நல்ல பலனை அடையலாம். சங்குப் பூ செடியின் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி காலில் கட்டி வைத்தால் யானைக்கால் நோயினால் ஏற்படும் வீக்கம் குறையும். 
  • தேநீர் தயாரிக்க : சங்குப் பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். 
  • சங்குப்பூக்களின் வேர்கள் குடல், வயிறு ஆகியவற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவல்லது.
  • வேர்களை கஷாயமாக வைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்த பூச்சிகள் வெளியேறும். 
  • நெய்யில் வறுத்த விதைகளை தேநீராக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க இரைப்பை நோய் குணமாகும். 
  • வெள்ளைப்படுதல் உள்ளவர்கள் இதன் இலைகளை நீரில் காய்ச்சி அதனைக் கொண்டு உள்ளுறுப்புகளை நாளொன்றிற்கு இரண்டு முறை கழுவ விரைவில் சரியாகும்.  
  • நீண்ட நாட்களாக இருக்கும் கபநோய்கள், சிறுநீர் பாதையில் வரும் நோய்களுக்கு இந்த சங்குப் பூ செடியின் பட்டையை நன்கு இடித்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து அருந்த விரைவில் நிவாரணம் பெறலாம்.  
  • கருவுற்றிருக்கும் பெண்களை தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சங்குப் பூ தேநீரை அவ்வப்பொழுது பருகலாம்.  

சனி, 15 மே, 2021

வெப்பாலை

வெப்பாலை 




பெயர்க் காரணம்: பாலை, நிலமாலை, வெப்பாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களைக்கொண்டது. வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது. சாலை ஓரங்களில் வெண்ணிற மரப்பட்டைகளுடன் நிறைய வெட்பாலை மரங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். 

அடையாளம்: இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘V’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும் இதன் காய்களைப் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது. மர வகையைச் சார்ந்த இதன் காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர்.    

மருந்தாக :

  • இது சுரத்தைக் குறைக்கும். சுரத்தால் உண்டாகும் உடல் களைப்பைப் போக்கவும், சோர்ந்திருக்கும் செரிமான உறுப்புகளைத் தூண்டிவிடவும் இதன் மரப்பட்டைக் குடிநீர் பயன்படும்.
  • வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த இதன் மரப்பட்டைகளோடு சீரகம் சேர்த்துக் குடிநீரிட்டு கொடுக்கலாம். 
  • வெட்பாலைக் காய்களுக்குள் இருக்கும் இனிப்புச் சுவைகொண்ட ‘வெட்பாலை அரிசிக்கு’ செரிமானத் தொந்தரவுகளைப் போக்கும் திறன் உண்டு. 
  • துவர்ப்புச் சுவை மிக்க இதன் பட்டைக்கு, புழுக்களை அழிக்கும் சக்தியும், நஞ்சு முறிவு மற்றும் காமம் பெருக்கிச் செய்கையும் உண்டு. 
  • செதில் செதிலாகத் தோல் உதிரும் காளாஞ்சகப்படை (சோரியாஸிஸ்) நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முதன்மையான மருந்து வெட்பாலை.
  • வெட்பாலை அரிசி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது. ‘கால்சியம் சேனல் ப்ளாக்கராக’ செயல்பட்டு, இரத்தக் குழாயை விரிவடையச் செய்து அதிகுருதி அழுத்தத்தைக் குறைக்கிறது. 
  • இதன் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘இன்டிரூபின்’ (Indirubin) எனும் வேதிப்பொருளுக்குப் பூஞ்சைத் தொற்றுகளை அழிக்கும் செயல்பாடு இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  • இலைகளிலிருக்கும் ‘ரைடியாடையோன்’ (Wrightiadione) எனும் பொருள், புற்று செல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. 

வீட்டு மருந்தாக: 

  • இதன் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம். 
  • இதன் இலைக் காம்பை உடைத்தால் வெளிவரும் பாலை, காயங்களுக்குத் தடவ விரைவில் குணம் கிடைக்கும். காயங்கள் மட்டுமன்றி தோல் வறட்சிக்கும் இதன் பாலை வெளிப்பிரயோகமாகத் தடவும் வழக்கம் தொடர்கிறது. 
  • ஆரம்ப நிலை பல் வலியைப் போக்க கிராமங்களில் இதன் இலையை அப்படியே மென்று சாப்பிடுகிறார்கள். கிராம்பு மற்றும் வெட்பாலை இலைகளைச் சேர்த்து மென்று சாப்பிடப் பல்வலி, பல்கூச்சம் மறையும். 
  • இலைகளை உலர வைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழப்பி, புண்களின் மேல் களிம்பாகப் பயன்படுத்தலாம். தோல் நோய் போக்கும் சோப்புகளில் வெட்பாலையின் சத்துகள் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கூந்தலைக் கருமையாக்க, செயற்கைச் சாயங்களுக்கு மாற்றாக இதன் இலைகளை முடிச்சாயமாகப் பயன்படுத்தலாம். 

வெட்பாலை எண்ணெய்: வெட்பாலை இலைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் தேவையான அளவு நறுக்கி வைத்த வெட்பாலை இலைகளைப் போட்டு, ஏழு நாட்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைக்க வேண்டும். விரைவில் கருநீல நிறத்துடன் மருத்துவக் குணம் நிறைந்த வெட்பாலை எண்ணெய்யாக உருவெடுக்கும். சாதா தோங்காய்  எண்ணெய், எந்த வேதியல் கலவையின் உதவியுமின்றி கருநீல நிறத்துடன் மாறிய அதிசயத்தைப் பார்க்கலாம். 

இந்த எண்ணெயை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும். 

வெட்பாலை நம் வாழ்வை ஆக்கும் பூஞ்சோலை!

சனி, 24 ஏப்ரல், 2021

ஆவாரை

 ஆவாரை 




அழகிய மஞ்சள் வண்ணத்தில் கொத்துக் கொத்தான மலர்களைத் தாங்கி எங்கும் வளரும் ஒரு செடி ஆவாரை ஆகும். சாலை ஓரங்களிலும் சிறுகுன்றுகளிலும் நம் கண்ணுக்கு அதிகம் விருந்தாகிற செடியான ஆவாரை, மூன்று அடிகள் வரை வளரும் ஒரு குத்துச் செடியாகும். இதன் இலை, பூக்கள், பட்டை, விதை, வேர் மற்றும் பிசின் ஆகிய அனைத்துமே மருந்தாவது மட்டுமின்றி  பயிர்களுக்கும் சிறந்த உரமாக விளங்குகிறது.   

ஆவாரையின்  அனைத்துப் பகுதிகளும் மிக்க துவர்ப்புடையது, காய்ச்சலைப் போக்கும் குணம் உடையது, கல்லீரல் மற்றும்  மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்  தன்மையுடையது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்  கொள்ள உதவுவது. 

உடலின் பல பகுதிகளிலும் தன்னிச்சையாகச் செயல்பட்டு பல  கேடுகளை உண்டாக்கிப் பின் புற்றுநோய்க்குக் காரணமாக விளங்கும் நச்சுக்களை(Free Radicals) விரைந்து வெளியேற்றும் குணம் கொண்டது. மனிதருக்கு நோய் செய்யும் நுண்கிருமிகள் எதுவாயினும் அழித்து அகற்றும் வல்லமை உடையது. 

ஆவாரம்பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும். ஈறுகள் பலம் பெறும், பற்கள் கெட்டிப்படும். 

இது உடலை வற்றச் செய்யும் மருத்துவ குணம் உடையது. மேலும், உடலுக்கு டானிக்காக உரம்  தரக்கூடியது. ஆவாரையின் விதைகள் குளிர்ச்சியுண்டாக்கும் தன்மை உடையது,  குருதியை நீர்மைப்படுத்தக்கூடியது உடல் தேற்றியாக விளங்கக் கூடியது. 

ஆவாரை நெஞ்செரிச்சல், அமில மேல்வரத்து(Reflex), ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், மலச்சிக்கல், ரத்த மற்றும் சீதபேதி, நீர்க்கசிந்து அரிப்பைத் தரக்கூடிய ‘எக்ஸீமா’ எனும் தோல் நோய், கண்களின் எரிச்சல், புகைச்சல் மற்றும் புளிப்பு உண்டாகுதல், உயர் ரத்த அழுத்தம், வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலருக்கும்), மூட்டுக்களில் ஏற்படும் வலி, சிறுநீருடன் விந்து கலந்து வெளியேறுதல், வயிற்று வலி, உடலில் ஏற்படும் பலவித வீக்கங்கள், சிறுநீர்த் தாரையில் ஏற்படும் தொற்றுக்கள் போன்ற மிக நீண்ட பட்டியலான நோய்களைத் தீர்த்து வைக்கும் திறன் படைத்தது. 

ஆவாரம் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும், சருமம் பொன்னிறமாகி அழகு கூடும், எந்த வீக்கமும் விரைவில் கரைந்து போகும், உடலின் வறண்ட தன்மை மாறும், நாவறட்சி நீங்கும், உடலில் உப்பு போன்ற வெண்மை படிதல் தடுக்கப்பட்டு துர்நாற்றம் தரக்கூடிய கற்றாழை வாடை அகலும்.  

பல வகைப்பட்ட சிறுநீர் கோளாறுகளை அகற்றும் திறன் கொண்டது, சிறுநீரோடு சர்க்கரை கலந்து வெளியேறுதலும், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் சிறுநீர்த்தாரை எரிச்சலும், சிறுநீர் தொற்றும் ஆவாரையால் ஒழிந்து போகும் என்று பாடியிருக்கிறார் அகத்தியர்.

இவற்றை மனதில் கொண்டுதான் ஆவாரையின் ‘ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழி தமிழில் நிலைபெற்றது எனலாம்.

ஆவாரையின் மருத்துவப் பயன்கள் : 

* ஆவாரைப் பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின் வாய்க் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகும்; பற்கள் பலம் பெறும். இதையே உள்ளுக்குக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும். 

* ஆவாரை விதையைக் காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வைக்க கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும். 

* ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை தவிர்க்கப்பெறும். 

* ஆவாரம்பூவைக் கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து சாப்பிட உடலின் கற்றாழை வாடை விலகிப் போகும். 

* ஆவாரைப் பஞ்சாங்கம் எனப்படும் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியன சேர்ந்த கலவையை சம அளவு எடுத்து, அதன் கலவையை 10 கிராம் அளவு காலையும் மாலையும் இருவேளை வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் சரும நோய்கள், நாவறட்சி, அடங்காப்பசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் சோர்வு, மயக்கம், மூச்சு முட்டுதல் ஆகியன விரைந்து குணமாகும். 

* ஆவாரைச் செடியின் பிசின் சேகரித்து தினமும் இருவேளை குளிர் நீராேடா அல்லது மோரோடோ பத்து கிராம் வரை குடித்து வர இருபாலருக்கும் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும். சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலும் விலகிப் போகும். 

* ஆவாரைப் பஞ்சாங்கத்தை குடிநீர் ஆகக் காய்ச்சி குடிநீரின் அளவுக்கு சரியளவு பனங்கற்கண்டு சேர்த்து வால்மிளகு, ஏலக்காய் இவற்றை போதிய அளவு உடன் சேர்த்து மணப்பாகாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் இருவேளை பால் அல்லது நீர் சேர்த்து பத்து மில்லி வரை சாப்பிட்டுவர இளைத்த உடல் பலம் பெறும். அதிக சிறுநீர் போவது மட்டுப்படும். 

* ஆவாரம் இலையை இடித்து தலை முதல் கால் வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம், உடலில் ஏற்பட்ட ரணம் ஆகிய அனைத்தும் போகும். 

* ஆவாரம் பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும். இதை உடலுக்குப் பூசிக் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம். 

* ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும். 

* ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும். 

* ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும். 

* ஆவாைரயின் வேரைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் 10 கிராம் அளவுக்கு தீநீர் இட்டுக் குடிக்க காய்ச்சல் எவ்வகையாக இருந்தாலும் அடங்கிப் போகும். அது மட்டுமின்றி சர்க்கரை நோயும் கட்டுக்கடங்கும். 

* ஆவாரம் பூவின் சூரணத்தை அந்தி சந்தி என இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர PCOD எனும் கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும். 

* ஆவாரையைத் தேநீராக்கிக் குடித்து வருவதால் இரண்டாம் நிலைச் சர்க்கரை(Type 2) தவிர்க்கப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்(Motility) அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் மட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சீராகும். 

ஆவாரை சாலை ஓரங்களில் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒன்று. அதன் மிகப் பெரிய மருத்துவ குணம் தெரிந்து இனியேனும் பயன்படுத்திக் கொள்வோம். 

சிவகரந்தை

சிவகரந்தை 




மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும். இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது. 

சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். கபத்தை கரைக்கும். நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும். 

சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள், ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. 

  • சிவகரந்தையின் வேரை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். சூரணம் செய்தும் சாப்பிடலாம். 
  • சிவக்கரந்தை சூரணம் மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது, சிறுநீரக நோய்களை போக்க வல்லது, உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும், நல்ல பசியை  தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. 
  • கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், பேதி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர தலை, மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும். 
  • சிவ கரந்தையின் வேருடன் சீரகம் போட்டு கசாயம் செய்து காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும். 
  • கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும். 
  • இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும்,  ஆண்மை பெருகும்.

வியாழன், 8 ஏப்ரல், 2021

குன்றிமணி - Crab's eye

குன்றிமணி 




படத்தில் இருப்பது வெள்ளை குன்றிமணி, பண்டைய காலத்தில் பொன் மற்றும் வைரங்களின் எடை அளவு அறிய குன்றிமணி பயன்பட்டன. 2 குன்றிமணி எடை என்பது இப்போது சுமார் 1 கிராம் எடையைக் குறிக்கும். 

சித்த மருத்துவத்தில் தலைக்கு எண்ணெய் காய்ச்சுவதிலும் அழகு சாதனப் பொருட்களில் சேர்மானப் பொருளாகவும், குன்றிமணியின் பங்கு உண்டு. இலை மற்றும் வேர் மருத்துவ பயன் கொண்டது. 

குன்றிமணி இலைகளின் கசாயமானது இருமல், சளி மற்றும் குடல்வலியை போக்கும். மேலும் இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து உடலில் வீக்கங்கள் உள்ள இடத்தில் பூசி வர வீக்கம் வடியும். அதுமட்டுமின்றி வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை குன்றிமணி இலைகள் சிறந்த தீர்வு அளிக்கும். 

குன்றி மணியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கல்லீரல் நோய், நீரிழிவு நோய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. 

மருத்துவ பயன்கள் இருந்தாலும்  குன்றிமணி விஷத்தன்மை கொண்டது. உலகம் முழுவதும் தாவரத்தில் இருந்து பெறப்படும் விஷத்தில் மூன்றாவது இடம் இந்த குன்றி மணிக்கு என்று சொல்லப்படுகிறது. 

ஆன்மீக ரீதியாக சொல்வதென்றால், தொடர்ந்து தோல்வியை சந்திப்பவர்கள் இந்த வெள்ளை குன்றின் மணியை தன்னிடம் வைத்துக் கொண்டால் வெற்றியை அடையலாம். தொழிலில் தோல்வி இருந்தாலும், படிப்பில் தோல்வி இருந்தாலும், எப்படிப்பட்ட தோல்வியாக இருந்தாலும் அதனை வெற்றியாக மாற்றும் சக்தி இந்த வெள்ளை குன்றின் மணிக்கு உள்ளது.

திங்கள், 18 ஜனவரி, 2016

Basil and its Health Benefits - துளசிச் செடியின் மருத்துவ பயன்கள்

துளசி பற்றி ஒரு அறிமுகம்

அன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் வீட்டை சுற்றி இருக்கும் இயற்கை வளங்களை கொண்டு எந்த நோய் வந்தாலும் தீர்க்கும் முறையை தங்கள் முன்னோர்கள் மூலம் அறிந்து பயன்படுத்தி நோய்களை வென்றார்கள். இன்றைய காலகட்டத்தில் பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் அநேக வீடுகளில் வயதானவர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது, பெரியோர்களின் முக்கியத்துவமும் அவர்களின் மருத்துவ அறிவும் இன்றைய தலைமுறைக்கு தெரியாமலே போய்விட்டது.

இன்று சளி, இருமல். தும்மல், தலைவலி வந்தால் உடனே மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால், அந்தக் காலத்தில் வீட்டைச்சுற்றி வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் அரைத்து கசாயம் போட்டு தலைவலி முதல் பிரசவம் வரை மருத்துவம் பார்த்திருக்கின்றனர். ஆனால் இன்று நம்மைச் சுற்றி வளரும் மூலிகைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறோம், அதனால் நம்மைச் சுற்றி இருக்கும் மூலிகைகள் பற்றியும் அதன் மகத்துவதை பற்றியும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன், மூலிகைகளில் சித்தர்களும், முனிவர்களும் மூலிகைகளின் அரசி என போற்றிய மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்த துளசி பற்றி பார்போம். துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் பின் புறத்தில், துளசிமாடம் அமைந்திருப்பதை இன்றும் காணலாம்.

சுற்றுச்சுழலை தூய்மைப்படுத்தும்

துளசிச் செடி காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு மற்ற தாவரங்களை விட அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் தான் நம் முன்னோர்கள் வீடுகளில் துளசியை வளர்த்து அதிகாலையில் அதைச் சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையாக‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் அதை சுவாசித்து நாம் ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ எண்ணத்தில் இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மேலும் துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

வேறு பெயர்கள் மற்றும் வகைகள் 


துளசிக்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல்வேறு பெயர்களும். நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகளும் உள்ளன. இதில் வெண்துளசியை இல்லங்களில் வளர்க்கிறார்கள். இதன் இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை பல நோய்களை தீர்க்கும் தன்மை உடையது.

தலைமுடியை பேணும் 

தலையில் இருக்கும் பேன், பொடுகு, அரிப்பு போன்ற நோய்கள் தீர துளசி சாறு, எலுமிச்சம் சாறு, தூய கற்பூரம் (பச்சை கற்பூரம்) ஆகியவற்றை கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின் குளித்தால் குணமாகும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர 

துளசி இலைச்சாற்றுடன் சிறிதளவு தூய கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும். 

துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை பல் வலியுள்ள இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வர பல் வ‌லி குறையு‌ம்.

சொத்தை பல் மற்றும் ஈறு வீக்கம் இருந்தால் துளசிச் சாற்றோடு கிராம்புத்தூள், கற்பூரம் கலந்து அதன் மேல் 
வை‌த்து அழு‌‌த்‌தி வர குணமாகும்.

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல் சொத்தை, ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

துளசியின் உலர்ந்து இலை 10 கிராம், சடாமாஞ்சில் 2 கிராம், அக்கராகாரம் 12 கிராம், உப்பு 8 கிராம், களிப்பாக்கு 5 கிராம், சீமை வாதுமைக் கொட்டையின் கரித்தூள் 10 கிராம், ஏல அரிசி 8 கிராம் சேர்த்து எடுத்து பொடியாக்கி காலையும், இரவு சாப்பிட்ட பின்னும் பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.

வாய்ப்புண் வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும், வாய் துர்நாற்றமும் ஏற்படும், துளசி இலையை மென்று சாறினை முழுங்க வயிற்றுப்புண் ஆறுவதோடு வாய்ப்புண்ணும் ஆறி வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

நாக்கில் அழுக்கு அதிகமாக சேர்ந்து சுவை அறியாமல் வாயும் ஒருவித குழகுழப்பு தன்மை கொண்டிருக்கும் அதற்கு துளசி இலையை மென்று உண்டால் அந்த தன்மை நீங்கி நாக்கிற்கு சுறுசுறுப்பையும் சுவை அறியும் தன்மையையும் ஏற்படும்.

தலைவலி தீர


ஒரு கைப்பிடி துளசி இலை, 3 மிளகு, 1 துண்டு இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

துளசியை வெந்நீருடன் அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைபாரம், தலைவலி ஆகியவை குறைந்துவிடும்.

கடுமையான தலைவலிக்கு கிராம்பு, சுக்கு ஆகியவற்றை துளசி சாற்றுடன் அரைத்து நெற்றியில் பற்றுப் போட குணமாகும்.

நீர்க்கோர்வை மற்றும்  தலை குடைச்சல் குணமாக துளசியைத் தூள் செய்து மூக்குப் பொடியாக உபயோகிக்க நல்ல பலனைத் தரும் மற்றும் மூக்கடைப்பும் குணமாகும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் கண் சூடு குறைந்து கண் நரம்புகள் பலப்படும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. மாலைக்கண் நோய் குணமாக வாய்ப்புள்ளது.

துளசி இலையை சாறு பிழிந்து கொதிக்க வைத்து, சம அளவு தேன் கலந்து கண்களில் மை போல இட்டால் கண் பொங்குதல் குணமாகும்.

கண்ணில் விழுந்த மண், தூசியை வெளியேற்ற துளசி இலை ஊறிய நீர் கொண்டு கண்ணை கழுவ வேண்டும்.

காது நோய்க்கு தீர்வு

துளசி இலையை கதிர்களுடன் (பூவோடு) பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 அல்லது 15 நாட்களில் காது மந்தம் தீரும்.

துளசி இலைச்சாறு 2 சொட்டு, வெள்ளைப்பூண்டுச் சாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டால் சீழ் வடிதல் நிற்கும்.

துளசிச்சாறு 2 சொட்டு, கரிசலாங்கண்ணிச்சாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டு வர காதுவலி மற்றும் காதில் இரத்தம், சீழ்வடிதல் குணமாகும். 

சரும நோய்கள் நீங்கும் 

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகள் குணமடைய துளசி இலையை எலுமிச்சைச் சாறு சேர்த்து மையாக அரைத்து அந்த கலவையை படை மற்றும் சொறி இருந்த இடத்தில் தடவி வர நோய் இருந்த இடம் தெரியாமல் மறையும். 

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் நோய் நீங்கும். 

உடலில் ஏற்படும் தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி, படர்தாமரை சிரங்கு போன்றவற்றில் துளசி இலைச் சாற்றை பற்று போட்டு, இலையை   கஷாயமாக்கி குடித்தால் அந்த நோய்கள் நீங்கிவிடும். 

உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்கள் மற்றும் வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை எளிதில் தழும்பு இல்லாமல் குணமாகும். 

துளசி வேர், சுக்கு வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்து நாள்தோறும் காலையில் வெந்நீரில் சுண்டக்காய் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் வெண் குஷ்டம் குணமாகும். 

உடலில் காயம் பட்டு இரத்தம் ஒழுகினால் துளசி இலை பொடி அல்லது துளசி இலைச்சாற்றை போட இரத்தம் நின்று காயம் விரைவில் ஆறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பரு மறையும்.

ஜீரண சக்தியை பெருக்க 

துளசி இலைகளை புட்டு அவிப்பது போல் அவித்து சாறு பிழிந்து 5 மி.லி. விதம் காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும்.

துளசி இலையை மென்று உண்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் நல்ல பசி எடுக்கும்.

உண்ட உணவு சரிவர ஜீரணமாகாமல் இருந்தால் துளசி இலை 10 கிராம் சிறிதளவு கருப்பு உப்பு கலந்து வெந்நீருடன் சாப்பிட குணமாகும், குடல் பூச்சிகளையும் அழிக்கும்.

வயிற்றில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை போக்கும்

விரதம் இருப்பவர்கள் விரத நாட்களில் வெறும் துளசி நீரை மட்டும் அருந்தி வந்தால் அவர்கள் உணவால் கிடைக்கக்கூடிய சத்தை இதில் பெற்றுக் கொள்ளலாம்.

துளசி கசாயத்தில் ஜாதிக்காய் தூளைக் கலந்து குடித்தால் தொடர் பேதி குணமாகும்.

துளசி இலை, மிளகு, ஓமம், பூண்டு, இந்துப்பு, தூய கற்பூரம் இவற்றை சம அளவாக எடுத்து நீர் விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரைகளாகச் சாப்பிட்டால் வாந்தி பேதி நிற்கும்.

துளசி இலையை 200 மில்லி சாறு பிழிந்து கொதிக்க வைத்து சிறிது வெல்லம் கலந்து அருந்தினால் பித்தம் தணியும்.

துளசி இலை சாறு 200 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் இஞ்சி கசாயம் செய்து கலந்து சூடு உள்ள போது குடித்தால் வயிற்று வலி நீங்கும். 


வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க துளசியை கசாயம் செய்து அருந்தலாம். 

வாயுவினால் ஏற்படும் குடைச்சல், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உப்பிசம், பேதி, கீரைப்பூச்சி, பூச்சிகளால் ஏற்படும் பேதி ஆகியவற்றில் இருந்து விடுபட துளசியுடன் ஓமம் சேர்த்து சாப்பிட அவை நீங்கி விடுகின்றன. துளசி, ஓமம் சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம் அல்லது ஓமத்தை துளசி சாற்றில் ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்தும் சாப்பிடலாம்.

துளசி இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்


  • கல்லீரலை பலப்படுத்தி எந்த நோயும் தாக்காமல் காக்கும். 
  • வாந்தியை நிறுத்தும். 
  • வாய் துர்நாற்றத்தைப் போக்கும். 
  • உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகள் மற்றும் கிருமிகள் ஆகியவற்றை வெளியேற்றும். 
  • சகல விதமான வாயுத் தொல்லையை போக்குகிறது. வாயுப் பிடிப்பு குணமாகும். 
  • குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் நம் வாழ்நாள் முழுவதும் வராது. 
  • ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியும் ஏற்பட்டு உடலுக்கு ஒரு கிருமி நாசினியாக செயல்படும். 

மூல வியாதியை கட்டுப்படுத்துகிறது

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

காட்டுத் துளசி விதைகளை பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகை சாப்பிட்டு வர உள்மூலம் (பௌத்திரம்) குணமாகும்.

விஷக்கடிக்கு

பூச்சிக் கடி மற்றும் காணாக்கடி (நமக்கு இது கடித்தது என்று தெரியாத கடி) போன்ற கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும் அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

விஷத்தை குடித்தவர்கள் உடல் விஷம் முறியவும் பயன்படுத்தலாம்.

எலிக்கடி, தேள் கடி, பாம்பு கடி விஷத்தை கூட முறித்து உயிர்பிழைக்க வைக்கலாம்..

நோய் எதிர்ப்பு சக்தி

தினம் காலையில் சிறிது துளசியை உண்டு வந்தால் நமது உடல் நோயின்றி ஆரோக்கியமாகத் திகழும்.

தொற்றுநோய் பரவும் காலங்களில் சிறிது துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகி நோய் நம்மை தாக்காது.

கொஞ்சம் துளசி இலைகளை சுத்தமான மண்பானைத் தண்ணீரில் ஊறப் போட்டு அந்தத் தண்ணீரை குடித்து வந்தால்

  • நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 
  • உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. 
  • கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. 

ஜலதோஷம் மற்றும் இருமல் 

சளி, இருமல், காய்ச்சல் என்று வந்துவிட்டாலே கசாயம் போட நமது பெரியோர்கள் முதலில் தேடுவது துளசி இலை தான், துளசி இலை இல்லாமல் இத்தகைய நோய்க்கு தீர்வு கிடையாது என்பது தான் முற்றிலும் உண்மையாகும்.

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்புப் பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் சளி மற்றும் சளியினால் ஏற்படும் கதகதப்பு குணமாகும்.

  • இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக இருக்கும்.
  • இறுகியுள்ள மார்புச்சளியை இளகச் செய்து கபத்தை வெளிக் கொண்டு வருவதால் கபத்தால் ஏற்படும் துர்நாற்றத்தை நீங்கும். 
மிளகுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும். 

சளித் தொல்லைக்கு ஒரு வெற்றிலையுடன்  3 மிளகு, 5 துளசி இலையை சேர்த்து மென்று விழுங்க குணமாகும்.

துளசி இலைச்சாறில், தேன், இஞ்சிச்சாறு கலந்து ஒரு தேக்கரண்டி அருந்த ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை குணமாக்கும்.

துளசி இலைச் சாறு 50 மில்லி எடுத்து கொதிக்க வைத்து  சம அளவு தேன் கலந்து அருந்தினால், கபத்தினால் தோன்றிய இருமல் குணமாகும்.

மூச்சுத்திணறல், நுரையீரலில் ஏற்பட்டும் சளி, தொடர் இருமலால் ஏற்படும் விலாவலி, உடல் வலி குழந்தைகளுக்கு ஜலதோஷத்தால் ஏற்படும் பசிமந்தம், காரணம் புரியாமல் உடலை முறுக்கி அழுதல் போன்ற நிலைகளில் துளசிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பதால் அதிசயத்தக்கப் பலனை உண்டாக்கி ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு கைபிடி அளவு துளசி இலையை சிதைத்து, அரைலிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகும் வரை வற்ற வைத்து, வடிகட்டி 15 கிராம் கற்கண்டு, 2 தேக்கரண்டி தேனும் கலந்து தினம் 4 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர, மார்புச் சளி, காசநோய், காய்ச்சல் குணமாகும்.

துளசிப்பூங்கொத்து, திப்பிலி, வசம்பு சம அளவு எடுத்துப் பொடி செய்து ஒரு சிட்டிகைப் பொடியை தேனீல் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் குணமாகும்.

துளசி இலை சாறு 100 மில்லி, ஆடாதொடை இலைச்சாறு 100 மில்லி சேர்த்துக்கொதிக்க வைத்து குடித்தால் இருமல் நிற்கும்.

துளசி இலை, சுக்கு, பிரம்ம தண்டு, கொள்ளு இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து 200 மில்லி அளவு குடித்தால் இழுப்பு நிற்கும்.

துளசி இலை, துளசி மலர்க்கொத்து இவ்விரண்டையும் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயம் செய்து வெல்லம் சிறிது சேர்த்து குடித்தால் விக்கல், இழுப்பு நிற்கும்.

துளசி ஒரு பிடி, சுக்கு, திப்பிலி, மிளகு என்ற திரிக்கடுகு ஒரு தேக்கரண்டி போட்டு கஷாயமாக்கி அருந்தி வந்தால் சளி, இருமல் அண்டாது,

துளசி நாட்பட்ட இருமலை குணப்படுத்தும் சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவை குணமாக்கும் நுரையீரலை பலப்படுத்தும்.

ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது

மூளைக் காய்ச்சலுக்கு துளசியை கசாயமாக்கி கொடுக்கலாம். 

வைரஸால் ஏற்படக்கூடிய காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மலேரியா, விஷ ஜுரம், ஜன்னி வாத ஜுரம், குளிர் காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்கக் கூடிய வல்லமையும் வந்தால் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. 

துளசி, மிளகு, வெல்லம் ஆகியவற்றை கலந்து செய்த கஷாயம் மலேரியா, யானைக்கால் ஜூரம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றன

மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.

துளசி இலை 50 கிராம் மிளகு 50 கிராம் அரைத்து கடலை அளவு மாத்திரை ஆக்கி, இரண்டு வேளை வெந்நீரில் கலந்து கொடுக்க அல்லது 
துளசி இலை 10, மிளகு 10 இவ்விரண்டையும் நன்கு மென்று தின்றால் மலேரியாக் காய்ச்சல், குளிர் ஜுரம், உடல் வலி, தலைப்பாரம், மார்புச்சளி, சாதா ஜுரம், யானைக்கால் ஜுரம், ஜன்னிவாத ஜுரம் என  சகலவிதமான காய்ச்சலும் குணமாகும்.  

துளசி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் 1 பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் தாகம் தணியும்.

துளசி இலைச்சாறு ஒரு பங்கு, இஞ்சி இரண்டு பங்கு கலந்து கசாயம் செய்து நான்கு வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

துளசி இலை 10 கிராம், மிளகு தூள் 10 கிராம், பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

துளசி இலை 20, தோல் நீக்கிய இஞ்சி 2 கிராம் சிதைத்து 200 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மில்லி வீதம் குடித்து வர பித்த சீதளகாய்ச்சல் 3 நாளில் நீங்கும்.

துளசி இலை 10, மிளகு 5 சேர்த்து கஷாயம் காய்ச்சி தேன் மற்றும் வெல்லம் கலந்து பருகுவதால் ஜுரம் தணியும், ஜுரத்தின் ஆரம்ப நிலையில் அருந்தினால் ஜூரம் மேலும் கூடாமல் நின்று விடும்.

மிளகை துளசி சாற்றில் 7 முதல் 21 நாட்கள் வரை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, 5 முதல் 10 மிளகு வரை தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குளிர் ஜூரம், காணாக்கடி, சாதா ஜூரம் ஆகியவை தீரும். 

துளசி, மிளகு, தும்பை இலை ஆகியவற்றை கஷாயம் செய்து பருகுவதால் குளிர் ஜூரம் குணமாகும்.

காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த துளசியை மென்று சாப்பிட வேண்டும்,

தொண்டை வலி

தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

தொண்டைக்கம்மல், வலி நீங்க தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால் குணமாகும் மேலும் சளி, தொண்டைக்கட்டு,  உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

குழந்தைகளுக்கான சளி நீங்க 

துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து சாறு எடுத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும்.

சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, சளியினால் மூச்சு விட முடியாமை (மூச்சித் திணறல்) போன்றவை நீங்கும் மார்புச்சளி வெளியேறும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். மேலும் குழந்தைகள் வாந்தி, வயிற்றுப் போக்கை நிறுத்தவும் கொடுக்கலாம்.

துளசி, ஓமம் ஆகியவற்றை நீர் விட்டு அரைத்து, வடிகட்டி, தேன், சிறுது வெல்லம் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி குணமடையும். (ஓமத்திற்கு பதில் வெற்றிலையும் உபயோகிக்கலாம்).

துளசி சாற்றை இரண்டு தேக்கரண்டி வெந்நீரில் கலந்து தினமும் பருகி வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காற்றில் பரவும் நோய்கள் தாக்காது.

துளசி இலை 9 எண்ணிக்கை, கடுக்காய் தோல்  5 கிராம், கீழாநெல்லி 10 கிராம், ஓமம் 5 கிராம், மிளகு  3 எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் அவற்றை ஒதுக்கும்.

நீரழிவு நோய்க்கு தீர்வு  

நீரழிவு நோய் வந்தவர்கள் துளசி இலையை மென்று உண்ண உடலில் சர்க்கரையின் அளவு சீராகும்.

துளசி இலையைப்போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் நம்மை அண்டாது

சிறுநீர் பிரச்சனைகள் 

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி நீரை பருகுவதன் மூலம் மூத்திரத் துவாரவலி குணமாக.

சிறுநீரகக் கல் நீங்க

சிறுநீரகக் கல் கரைய துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து விடும். (சிறுநீரகக் கல் உருவான பின் ஏற்படும் வலியை அனுபவிப்பதை விட நாம் கல் உருவாவதை தடுக்கும் வகையில் அவ்வப்போது அருந்தலாம்)

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தம் சுத்தமாக்கும்.

பெண்களுக்கு குறிப்புகள் 

பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (அதிக இரத்தப் போக்கு) துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறவைத்து, தினமும் காலையில் 1 தேக்கரண்டி 48 நாட்கள் அருந்தி வர குணமாகும்.

துளசி இலைச் சாற்றில் பனங்கற்கண்டுத் தூள் கலந்து குடித்தால் பெரும்பாடு நீங்கும்.

துளசி இலைச்சாறு அரை கப் மற்றும் ஒரு கப் அரிசிக் கஞ்சி இரண்டையும் கலந்துச் சாப்பிட்டு  பால் சோற்றை உணவாகக் கொண்டால் பெரும்பாடு நீங்கும்.

துளசிஇலைச் சாறு, மணத்தக்காளி இலைச் சாறு, அமுக்கிரா கிழங்கு சாறு தலா 1 தேக்கரண்டி, தேன் அரை தேக்கரண்டி கலந்து 7 நாட்கள் குடித்தால் தாய்ப்பால் தூய்மை பெறும். சாறு கிடைக்காத பட்சத்தில் மூன்றையும் 1௦ கிராம் விதம் பொடி வடிவில் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.

மாத விலக்கு காலங்களில் பெண்கள் குளித்தப்பின் துளசி விதையை நீரில் ஊற வைத்து அரைத்து நெல்லிக்காயளவு 3 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை தூய்மை பெற்று கரு தங்கும்.

இருதயம் சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்துகிறது

துளசி இலைச்சாறு 1 மில்லி, தேன் 5 மில்லி, வெந்நீர் 50 மில்லி கலந்து ஒரு நாளைக்கு  இரு வேளை விதம் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இதயநோய் தீரும்.

கருந்துளசி இலை 25, செம்பரத்தம் பூ 2 இரண்டையும் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிக்கட்டி 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லி வீதம் 10 நாட்கள் குடித்து வர இருதயத்தை குத்தும் வலி, பிடிப்பு குணமாகும்.

துளசி இலை ஒரு கைப்பிடி மற்றும் 10 மிளகை தட்டி 2 கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி 2 தேக்கரண்டி தேன் கலந்து 50 மில்லி வீதம் 1 நாளைக்கு 6 வேளை 20 நாட்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத்துடிப்பும், இதயத்தைக் கட்டிப்போட்டது போன்ற வலியும் குணமாகும்.

இருதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மை  துளசிக்கு 
உண்டு

உடல் எடை குறைய

துளசியிலை சாறு 200 மில்லியாக எடுத்து கொதிக்க வைத்து 25 மில்லி தேன் கலந்து காலையில் குடித்து வர உடல் பருமன் குறையும்.

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

வெப்ப நோய்கள்

துளசியை கோடை காலத்தில் தினம் 1௦ இலைகள் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் மிகுந்தவர்க்கும் உடல் உஷ்ணம் குறைந்தவர்களுக்கும் உடல் சூட்டை சமச்சீராக வைக்க உதவும்.

அம்மை நோய் ஏற்பட்டிருந்தால் அதிகரிக்காதிருக்க செய்யும். 

துளசி விதை 10 கிராம், அரசவிதை 10 கிராம் சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக்கி 2 வேளை 1 மாத்திரை வீதம் பாலில் கலந்து சாப்பிட கணச்சூடு நீங்கும்.

துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி நெஞ்சில் உள்ள கோழையை அகற்றி உடல் வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

கோடைக்காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்

நரம்புக்கு ஊக்கம் தரும்

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடைந்து நரம்புத் தளர்ச்சி நோய் நீங்கி உடல் புத்துணர்வடையும்.

கை, கால், மூட்டு வலிகள் மற்றும் தசைகளில் ஏற்படும் கோளாறுகளுக்கு துளசி சாற்றை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் துளசி இலை சிறுது தினம் சாப்பிட குணமாகும்.

துளசி இலைச்சாறு, ஆமணக்கு வேர்ச்சாறு சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயமாக்கி குளிர்ந்த பின்பு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் வாதநோய் குணமாகும்.

துளசி விதையை பொடியாக்கி 20 கிராம் இரண்டு வேளை சாப்பிட்டு வர நரம்புகளில் வலி, சிறுநீர் தடை குணமாகும்.

இரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறு எடுத்து 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.
இரத்தத்தை சுத்தபடுத்தும் குணமும் துளசிக்கு உண்டு.

மன அழுத்தம் நீங்க

துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

துளசியின் மணம் அபாரமான மனத்தெம்பு அளிக்கிறது.

வலிகளுக்கு நிவாரணம்

விலாவலிக்கு துளசி இலை 1 கைபிடி, இஞ்சி 1 துண்டு, தாமரை வேர் 40 கிராம் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பற்றுப்போட குணமாகும்.

துளசி இலைச்சாறு 200 மில்லி எடுத்து சிறிதளவு இந்து உப்பு கலந்து குடித்தால் கை, கால் வலி குணமாகும்.

துளசி இலைச்சாறு 200 மில்லி எடுத்து காய்ச்சி சிறிது மிளகுத் தூள், பசு நெய் கலந்து சாப்பிட்டால் வாத வீக்கம் குணமாகும்.

குடும்பக் கட்டுப்பாடு

குடும்பக்கட்டுப்பாடு செய்ய தயங்கும் தம்பதிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

தாது விருத்திக்கு 

துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தாம்பூலத்துடன் கலந்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.

துளசி வேரை பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை வெற்றிலையுடன் மென்று தின்றால் கனவில் விந்து வெளியேறுதல் நீங்கும்.

துளசி வேர்த்தூள், காரும் கருணைத்தூள் சம அளவு எடுத்து ஒரு சிட்டிகை பொடியை  வெற்றிலையுடன் மென்று தின்றால் விந்து விரைவில் வெளியாகாமல் கட்டுப்படும்.

துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு வெற்றிலையுடன் சாப்பிட்டால், விந்து கட்டுப்படும்.

துளசி விதைப் பொடி 20 கிராம் பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டில் குடித்து வந்தால் விந்து பலப்படும் மேலும் நீரிழிவு நோயும் குறையும்(தினம் 2 வேளை 40 நாட்கள் இந்த மருந்தை எடுக்க வேண்டும்).

உடல் நலனில் அக்கறை  

துளசியை தினமும் சாப்பிட்டு வந்தால்

  • நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.
  • நமது உடலுக்கான சிறந்த கிருமிநாசினியாக துளசி செயல்படும் உடலை தூய்மைப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. 
  • வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. 
  • தாய்பால் சுரப்பு அதிகமாகும். 
  • உடல் சோர்வு தீரும் 
  • தலைசுற்று குணமாகும். 
  • பிரசவ வலி குறையும். 
  • எந்த வியாதியும் உண்டாகமலிருக்கும். 
  • கெட்டரத்தம் சுத்தமாக. 
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற துளசி இலை சாற்றை குடிக்க கொடுக்கலாம். 

துளசி நீர்

செய்யும் 
முறை

சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொள்ளவும். அதல்  சுத்தமான நீர் ஊற்றி ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும். இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பருகவும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால். பல நோய்களை குணமாக்குவதோடு நோய்கள் எதுவும் நம்மை தாக்காது, அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை தெளிவாகும் அதாவது இளமையுடன் என்றும் வாழலாம்.

துளசி ஒரு மருந்துச் செடி மட்டுமல்ல உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

குறிப்புகள்

துளசி சாறு அரை முதல் 1 அவுன்ஸ் பெரியவர்களும் கால் முதல் அரை அவுன்ஸ் 
குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்

சூர்ணம் 2-4 சிட்டிகை குழந்தைக்கும் அரை ஸ்பூன் முதல் 2 ஸ்பூன் வரை பெரியவர்களும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

துளசி இலைக்கு இயற்கையில் குடும்பவிருத்தியை கட்டுப்படுத்தும் குணம் இருப்பதால் திருமணத்திற்கு காத்திருக்கும் இளையோரும் இளம் தம்பதிகளும் அளவோடு சாப்பிடவேண்டும். (தவிர்ப்பது நல்லது)


வீடுகளில் துளசி இலைக் கொத்து கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது. சுற்றுப்புற மாசுகளை தூய்மை படுத்தி சிறந்த கிருமி நாசினியாக இருக்கும். துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். துளசியை நம் அன்றாட வாழ்வில் சேர்த்து கொணடால் நோய் இன்றி வாழ்வது நிச்சயம். சும்மாவா அந்த காலத்தில் பெரியோர்கள் துளசியை வீட்டில் வளர்க்க வேண்டுமென்று சொன்னார்கள். இனி வீட்டிற்கு அழகுக்காக வைக்கும் செடிகளோடு துளசியை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.



வாழ்க வளமுடன் 

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

Uses for ACALYPHA INDICA - குப்பைமேனி மூலிகையின் மருத்துவ குணங்கள்

குப்பைமேனி மூலிகை ஒரு அறிமுகம்.......


தாவரப்பெயர்    :- ACALYPHA INDICA.
குடும்பம்               :- EUPHORBIACEAE.



மூலிகை என்றால் காடுகளில் மட்டும் கிடைக்கக் கூடியது என்று நாம் நினைப்போம், ஆனால் அப்படி அல்ல, மூலிகைகள் காடுகள் தவிர நமது வீட்டருகே, சாலை ஓரங்களில், தோட்டங்களில், வயல் வரப்புகளில் என்று ஏராளமாக  வளர்கின்றன, நாம் களைகள் [வேண்டாத செடிகள்] என்று ஒதுக்கும் புல், செடி, கொடிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மருத்துவத் தன்மை இருக்கும், அவற்றில் சிலவற்றை கற்ப்பக மூலிகைகள் என கூறுவார்கள். அதில் ஒன்று தான் குப்பைமேனி மூலிகை. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்த குறுஞ்செடி இது சுமார் 50 செ.மீ. உயரம் வளர கூடியது.

இது இந்தியாவில் அநேக இடங்களில் காணப்படும் செடி, இதன் இலை பச்சை நிறத்தில் முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகு அளவில் பச்சையாக இருக்கும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். 

















பெயர் காரணம்.............. 


“குப்பை போல் ஆகிவிட்ட மேனியை சீர்படுத்தி பொன்மேனி ஆக்கும்“ 

தன்மை கொண்டதால் இந்தப்பெயர் பெற்றது என்று கூறலாம், இதன் வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. 



மருத்துவ குணங்கள் :

தோல் நோய் நீக்கும் குப்பைமேனி........................



  • குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர சிரங்கு மற்றும் உடல் அரிப்பு நீங்கி சருமம் பொலிவுபெறும். 

  • குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண்கள் மீது வைத்து கட்டினால் எந்த வகையான புண்ணும் குணமாகும் மேனி மீண்டும் எழிலோடு விளங்கும். 

  • குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும்.

  • குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

  • பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி (Facial) வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் காணாமல் போகும் முகமும் அழகும் பெறும்.  

  • பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் ரோமம் முளைத்து இருக்கும் அவர்கள் குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை மாவு போல் அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மீசை இருக்கும் பகுதியில் இரு வாரங்கள் பூசி வந்தால், முடி உதிர்ந்து முகம் பளிச்சிடும்.

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் படுக்கைப் புண் உள்ள இடத்தில் வைத்து கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். 

  • குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர முகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

வயிற்றுப் பிரச்சினைகளை குணபடுத்த .............


  • குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 1/2 ஸ்பூன் அளவு தேனில் அல்லது மிதமான வெந்நீரில் கலந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப் புழுக்கள், குடல்ப் புழுக்கள் வெளியேறும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

  • குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. அளவு பெரியவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்டு வந்தால் வாயுப்பிடிப்பு நீங்கும், குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும், சரும நோய்கள் அகலும், சுவாச நோய்கள் நீங்கி உடலும் ஆரோக்கியம் பெறும்.

  • குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி ஆகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.

  • 10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் மற்றும் கிருமிகள் வெளியேறும்.

  • குப்பை மேனிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக பருக குடலிலுள்ள பூச்சிகள் அழியும். 



வலி நிவாரணம் பெற............... 


  • தலை பாரத்தால் ஏற்பட்ட தலைவலி குணம் பெற குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து நன்றாக சலித்து வைத்து அந்த பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைபாரம் உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். 

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு  எண்ணெயில் வதக்கி இளஞ் சூட்டுடன் மூட்டு வீக்கம் உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும், வாத வலி உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வாத வலி தீரும்.

  • குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

  • குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சினால் உப்பு மட்டும் மிகுந்து விடும் இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர வாயு, அஜிரணம் மற்றும் வயிற்று வலிக்கு சிறந்த மருந்து. 

பூச்சி கடி விஷக்கடிக்கு.............. 


  • குப்பை மேனி இலையை மை போல் அரைத்து வண்டு, தேள், பூரான், பாம்பு, வெறிநாய்க்கடி மற்றும் எலிக்கடியின் கடிபட்ட இடத்தில் பத்து போட விஷம் முறியும். 

  • குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்த்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி (என்ன கடித்தது என்று தெரியாத போது) முதலியவை குணமாகும். மேகப்புண்ணும்  (பிறப்புறுப்புகளில், மலக்குடல், வாய் அல்லது விரல்களில் வலியற்ற புண்)  குணமடையும் .

  • குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட எல்லா வகையான கடியின் விஷமும் முறியும். இந்த சமயத்தில் வாந்தியும் பேதியும் உண்டாக்கும். (உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)



மலச் சிக்கல், மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.


  • குப்பைமேனி இலையை அல்லது வேரை கைப்பிடியளவு எடுத்து சீரகம் சேர்த்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். 

  • குப்பைமேனி சமூலத்தை (சமூலம் என்றால் இலை, தண்டு, பூ, காய், வேர் என அனைத்தும் சேர்ந்தது எனப் பொருள்) எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் எட்டு விதமான பவுத்திர நோய் தீரும்.

  • குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

  • மூலநோய் ஒரு சிக்கலான நோய். அறுவை செய்தாலும் வளரும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் (பொடி) செய்து இதில் 2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் கலந்தும் சாப்பிடலாம். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் கோழைச் சளி..........................


  • குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து (வாந்தி அல்லது பேதியாக) கோழையை அகற்றும், இருமலைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை குணப்படுத்தும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

  • குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். 

  • கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். 

  • ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

  • குப்பைமேனி இலைச்சாற்றை 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வர சுவாச நோய்கள் குணமாகும்.

சில பொதுவான மருத்துவ குணங்கள்..........


  • குப்பைமேனி, முருங்கைக்கீரை இரண்டையும் நல்லெண்ணையில் வதக்கி வேறு எதுவும் சேர்க்காமல் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் உடல் எடை குறைவது நன்றாக தெரியும். 

  • குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் வாதம், நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும். சித்த பிரமை குணமடைய வாய்ப்பு உண்டு. .



பேதி மருந்து தயாரிக்க குப்பைமேனி பயன்படுகிறது. 



எப்போதும் எந்த மூலிகைகளையும் உள்ளுக்கு சாப்பிட எடுத்துக் கொள்ளும் போது முதலில் சிறிது அளவு உபயோகித்துப் பார்த்து பின் தொடர்வது நல்லது.  இது அனைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும்.



குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.


வாழ்க வளமுடன் 

ஞாயிறு, 22 நவம்பர், 2015

Curry Leaf - கறிவேப்பிலை

கறிவேப்பிலை இலையின் மருத்துவ மகத்துவம் :





சத்துகள்  :  வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து .

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால்  கிடைக்கும் நன்மைகள். 



கொழுப்புக்கள் கரையும்:

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள  அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான உடல் அமைப்பை பெறலாம்.

இரத்த சோகை:

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பரம்பரையாக வரும் சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய்:

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் :

அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி :

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தொல்லை:

ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு:

நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.  அதிக குடியினால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல பலன் அடையலாம்.

மன சிதைவு

ஒரு பிடி கறிவேப்பிலை சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து வெறும்  வயிற்றில் உட்கொண்டு வந்தால் மன அழுத்தத்தால் ஏற்பட்ட பிதற்றல் குணமாகும்.


மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

வியாழன், 19 நவம்பர், 2015

Adatoda Vasica Nees - ஆடாதொடை [ஆடாதோடை]

Name : ஆடாதோடை - Adatoda Vasica Nees


Family : குடும்பம் – Acanthaceae


வளரும் தன்மை: ஆடாதோடை நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி.

பயன்தரும் பாகங்கள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.


ஆடாதோடை

மருத்துவப்பயன்கள்:

ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால்  ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை (wheezing) அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும்

இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும்.

ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும்

இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீரில் கலந்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமஅளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

சுக்கு (Dry Ginger)

சுக்கு மருத்துவக் குணங்கள்:-

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.