இருதய நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள சில இயற்கை மருத்துவக் குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
செம்பருத்திப் பூ பானம்
இருதய நோய் தீவிரமாக இருப்பவர்கள் செம்பருத்தி பூக்களின் இதழ்கள் 50 எண்ணம் எடுத்து அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்கும்.
இருதயத்தை காக்க உதவும் இஞ்சி
இரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செய்கிறது. அந்தவகையில், இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இருதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொள்ளலாம்.
இஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும், தேனும் சேர்த்து அருந்தலாம்.
இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர், எலுமிச்சைசாறு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி
இஞ்சியை துவையல், ஊறுகாய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இருதய நோயை வெல்லலாம்.
இருதய பலவீனம், இருதயத்தில் வலி, இருதயப் படபடப்பு போன்ற கோளாறுகளைப் போக்க, 1௦ கிராம் இஞ்சியைக் கழுவி, அம்மியில் வைத்து நைத்துச் சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு வைத்தால் அதிலுள்ள சுண்ணாம்பு வண்டல் அடியில் தங்கிவிடும், மேலே தெளிந்த சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்து, அத்துடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்கள் அருந்தி வந்தால் இருதயம் சம்பந்தமான நோய்கள் நீங்கும், மேலும் இருதயம் பலம் பெரும்.
இருதயத்தில் குத்தும் வலி குணமாக
இருதயம் பலம் பெற
நெஞ்சு வலிக்கு
இருதய அடைப்பு நீங்க
இரத்த நாளங்களிலே கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது, இதனால் தான் நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது. சீரகத்தை சாப்பிடும் போது இரத்தத்தை உறைய செய்யாமல் நீர்மைப்படுத்துகிறது, இரத்தம் இரத்த நாளங்களில் சீராக செல்ல உதவுவதுடன் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை கரைத்து விடுகிறது. கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகிய மூன்று விரல்களால் எவ்வளவு சீரகம் வருமோ அந்த அளவு எடுத்து நீரிலிட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர இரத்த அடைப்புகள் போகும்.
பூண்டும் இதய அடைப்பை கரைக்கும் குணமுடையது தினம்தோறும் பாலிலே 5 பல் பூண்டு சேர்த்து காய்ச்சி அருந்த இரத்த அடைப்பு நீக்கப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்கள் வெள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.
இருதய நோய் தீர
இருதய படபடப்பு குறைய
இருதய நோய் நீக்கும் பார்லி கஞ்சி
சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இருதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.
இது இருதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் வெகுவாக பயனளிக்கிறது.
பார்லியில் இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இருதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இரு தயத்தை பாதுகாக்க சில யோசனைகள்!
பெண்களுக்கு தாலி அணியும் காரணம்
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே உள்ள, நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி, உள்ளே உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
இருதய சம்பந்தமான ஆப்ரேஷனுக்கு பல லட்சங்கள் செலவு செய்து சரிசெய்கிறோம், ஆனால் ஆப்ரேஷன் முடிந்தவுடன் பழையபடி ஆரோக்கியத்திற்கு நம் உடல் செல்வதில்லை உடல் பலவீனமாக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் இத்தகைய நோய்களை தீர்க்க சமையலைறையிலேயே இயற்கை மருந்துப் பொருட்களை பொக்கிஷமாக வைத்துச் சென்றுள்ளனர், ஆனால் நாம் அதையல்லாம் மறந்து எதையும் உண்ணலாம், எதையும் அருந்தலாம், நோய் வந்தால், மருத்துவத்தை நாடி சுகம் பெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். இயற்கை உணவில் வாழ முயன்றால் நமக்கு இதய நோயே வராது, இயற்கை வழியில் சென்று இருதய நோய்க்கு நிரந்தர தீர்வு காண நம் பகுத்தறிவை பயன்படுத்துவோம்.
இருதய நோய் நம்மை மரணத்திற்கே இட்டுச் செல்லக்கூடும், நம்முடைய வாழ்க்கை முறையை ஒழுங்குப்படுத்தி வாழ்வதன் மூலம் இருதய நோய் நம்மை தாக்காமல் காத்துக்கொள்ளலாம்.
மாரடைப்பு, இருதய வால்வில் ஓட்டை, இருதய வால்வில் அடைப்பு, நெஞ்சு வலி, இருதய வால்வு சுருக்கம், பருமன் மற்றும் எதுவாக இருந்தாலும், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மருந்தில்லா இயற்கை மருத்துவம் என நமக்கு நாமே மருத்துவம் செய்து, அதற்கான வழிவகைகளை நன்கு அறிந்து, பின்பற்றி, எளிதில், விரைவில் நிரந்தரத் தீர்வு காணலாம். நன்றி...

- கருந்துளசி இலை, செம்பருத்தி பூ கசாயம் பத்து நாட்கள் சாப்பிடலாம்.
- கருஞ்துளசி இலை, மருதம் பட்டை கஷாயம் சாப்பிட்டலாம்.
இருதயம் பலம் பெற
- தினசரி ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம்.
- அத்திப் பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி தினம் சாப்பிட்டு வரலாம்.
- மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருதயம் பலம் பெரும் மேலும் ஜீரண சத்தியும் அதிகரிக்கும்.
- செம்பருத்தி பூவை உலர்த்தி பொடி செய்து எடுத்து அத்துடன் மருதம் பட்டை தூள் சம அளவு வெந்நீரில் கலந்து பருகலாம்.
- சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் கலந்து தொடர்ந்து 7 நாட்கள் அருந்தி வந்தால் இதயம் பலப்படும்.
- ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தாலும் இதயம் பலமாகும்.
நெஞ்சு வலிக்கு
- இலந்தை பழம் சாப்பிடலாம்.
- இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
- இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.
இருதய அடைப்பு நீங்க
இரத்த நாளங்களிலே கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது, இதனால் தான் நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது. சீரகத்தை சாப்பிடும் போது இரத்தத்தை உறைய செய்யாமல் நீர்மைப்படுத்துகிறது, இரத்தம் இரத்த நாளங்களில் சீராக செல்ல உதவுவதுடன் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை கரைத்து விடுகிறது. கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகிய மூன்று விரல்களால் எவ்வளவு சீரகம் வருமோ அந்த அளவு எடுத்து நீரிலிட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் அருந்திவர இரத்த அடைப்புகள் போகும்.
பூண்டும் இதய அடைப்பை கரைக்கும் குணமுடையது தினம்தோறும் பாலிலே 5 பல் பூண்டு சேர்த்து காய்ச்சி அருந்த இரத்த அடைப்பு நீக்கப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்கள் வெள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.
இருதய நோய் தீர
- துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாள் சாப்பிட்டு வரவும்.
- மருதம் பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்/
- தாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இருதய நோய் குணமாகும்.
இருதய படபடப்பு குறைய
- மாசிக்காயை பால்விட்டு உரசி காலை மாலை இரு வேலை அரைகிராம் நாவில் சுவைக்கலாம் (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்)
- தினசரி ஒரு பேரிக்கையை சாப்பிட இருதய படபடப்பை குறைக்கலாம்.
- திருநீற்று பச்சிலை முகர்வதால் இருதய படபடப்பு சாந்தமாகும்.
- சந்தன தூளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
- தாமரை இலையை கஷாயம் செய்து குடித்து வந்தால் இருதய படபடப்பு, மேல் மூச்சு வாங்குவது சரியாகும்.
இருதய நோய் நீக்கும் பார்லி கஞ்சி
சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இருதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.
இது இருதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் வெகுவாக பயனளிக்கிறது.
பார்லியில் இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இருதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இரு தயத்தை பாதுகாக்க சில யோசனைகள்!
- மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.
- உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.
- நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வப்போது சாப்பிடுங்கள்.
- பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் – பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.
- உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள்.
- தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
- சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதி தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்.
- மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் 90 % நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.
- மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
- எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.
- எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வதை விட சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள்.
- கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.
- அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார்!
- குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.
- உங்கள் படுக்கை அறையில் தொலைக்காட்சி, கணினி, வளர்ப்புப் பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.
- உடல் எடை கூடுவதற்கு தொலைக் காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்
- உங்கள் அலைப்பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.
- மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.
- சிரிப்பு (Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை ஆகியவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
- தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்.
- உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.
- நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என (Optimist ) நம்புங்கள்.
- மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.
- நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்.
- வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.
- பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

வாழ்க வளமுடன்