மூல நோய் கசாயம்
வலியோடு இருக்கும் செரிமானம் இன்மை, சீரணம் இன்மை,
நாக்கில் சுவை இன்மை, குடல் புழுக்கள், குடல் பூச்சிகள்,
மூலம் சம்பந்தப் பட்ட மூலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு வலி,
ஆசனவாய் அரிப்பு சம்பந்தப் பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
தீர்வாக அமைகிறது இந்த மருந்து.
சுண்டைக்காய் வற்றல் ................ இரண்டு கிராம்
மிளகு ................ இரண்டு கிராம்
சீரகம் ................ இரண்டு கிராம்
வெந்தயம் ................ இரண்டு கிராம்
கறிவேப்பிலை ................ இரண்டு கிராம்
ஆகிய ஐந்து பொருட்களையும்
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து நன்கு காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடிகட்டி ஒரு வேளை மருந்தாக வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.
நாள்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் ஒவ்வொரு முறையும் புதிதாக கசாயம் போட்டு குடித்து வர வேண்டும்.
கம கம என்று வாசனையுடன் கூடிய கசாயம் இது
குறிப்பு
அனைத்துப் பொருட்களையும் சம அளவு சேர்த்து அரைத்து தூளாக்கி சூரணமாக எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு முதல் வாய் சோறு நெய்யில் பிசைந்து கொடுக்கலாம்
- கர்ப்பிணிப் பெண்களும் இந்த மருந்தை பயமின்றி பயன்படுத்தலாம்
- இதை ஒரு பருப்புப் பொடி போல பயன்படுத்தலாம்
- அல்லது ஒரு துவையல் போல அரைத்தும் பயன்படுத்தலாம்
- வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் நல்ல மருந்து இது
- மூல நோயைக் கரைக்கக் கூடிய மூல நோயின் தொந்தரவை மாற்றக் கூடிய எளிய மருந்து இது
- ஆசன வாய் அரிப்பு முள் குத்துவது போன்ற எரிச்சலும் வலியும் வேதனையும் நீக்கக் கூடிய மருந்து இது
மூன்று வகை மூல நோய்களையும் நீக்கிக் கொள்ள உதவும் நல்ல மருந்து இது
முதல் வகை மூல நோய்
உள் மூலம்
மலம் கழிக்கும்போது கடுமையான வலி வேதனை இரத்தப் போக்கு ஏற்படும் உள்ளே இருக்கக் கூடிய மூலத்தில் இருந்து கடுமையான வலியும் அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்
மலசிக்கல் அதிகமாக இருக்கும்
வெளிப்புறமாக பார்க்கும்போது எந்த வித பாதிப்பும் தெரியாது
இரண்டாம் வகை மூல நோய்
வெளி மூலம்
மலம் கழிக்கும்போது மட்டும் ஒரு தசைப்பகுதி வெளியில் வந்து இருப்பதை உணர முடியும்
மலம் கழித்த பின் ஆசனவாயை சுத்தம் செய்யும்போது தசை வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையை உணர முடியும்
அரைமணி நேரத்தில் தானாகவே உள்ளே போய் விடும்
ஆசன வாய் முழுவதும் வலி வேதனை எரிச்சல் கடுமையான குத்தல் வலிகளும் இருக்கும்
மூன்றாம் வகை மூல நோய்
உள்ளே வளர்ந்திருக்கக் கூடிய தசைப்பகுதி முழுவதும் வெளியே பிதுங்கி தொங்கிக்கொண்டு இருக்கும்
எவ்வளவு முயற்சி செய்தாலும் உள்ளே போகாது
இந்த மூன்று வகை மூல நோய்களையும் நீக்கிக்கொள்ள உதவும் அற்புதமான மருந்து இது
மூல நோய் வராமல் தடுக்க மூல நோயை அறுவை சிகிச்சை இன்றி குணப் படுத்திக் கொள்ள மூல நோய் மீண்டும் ஏற்படாமல் காக்கக் கூடிய ஆசன வாய் தசைப் பகுதிகள் மலப் பை பகுதி தசைப்பகுதிகளும் இரத்தக் குழாய்களும் பலப் பட உதவும் மருந்து இது
- சுவை இன்மை ருசி இன்மை பிரச்சினைக்கும் தீர்வாக அமைகிறது இது
- உணவு சாப்பிடுவதில் விருப்பத்தை ஏற்படுத்தி உடலுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
- குடல் புழுக்கள் முழுமையாக வெளியேற காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்
இதை ஒரு மருந்தாக அல்ல உணவாக சாப்பிட்டு நலமுடன் வாழ முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக