கண்ணைக் கவரும் சிவப்பு நிறப் பழங்கள்
இயற்கை நமக்களித்த கொடை, சமைக்காமல் உண்ணக் கூடிய உணவான பழமாகும், பழம் நம் நாவுக்கு ருசியை தந்து உடலுக்கு ஊட்டத்தையும் புத்துணர்ச்சியும் வழங்குகிறது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம், நோயுற்றவர்கள் சாப்பிட்டால் உடல் நலம் தேறி புதிய தெம்போடு இருக்கலாம்.
வண்ணத்திற்கும் பழத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, அதாவது மனதை கவரும் சிவப்பு வண்ணம் கொண்ட பழங்கள், நம் உடலின் இரத்த சம்பந்தமான நோய்களை தீர்க்கவும், நரம்பு, தசைகள், எலும்புகள், பார்வை மற்றும் சிறுநீரகங்களை பலப்படுத்தவும் உதவும், எல்லாவற்றுக்கும் மேலாக இருதயத்திற்கு சிறந்த டானிக்காக விளங்குகின்றன.
முத்துகளால் நிறைந்த மாதுளம்பழம்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் தான் நம் உடலுக்கான ஆற்றலை பெற முடியும், உடலில் தேங்கும் கழிவுகளை அவ்வப்போது நீக்கி உடலுக்கான ஆற்றலை கொடுத்து நல்ல உடல் நலத்தோடு நம்மை வைப்பது தான் இயற்கையின் இயல்பே, அதற்கு உதவும் வகையில் நாம் வாழ தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, சிப்பிக்குள் முத்து இருப்பது போல், சிவந்த தோலுக்குள் சத்தான, சிவப்பு நிற முத்துகளை கொண்ட மாதுளம்பழம் பற்றி பார்க்கலாம்.
மாதுளம்பழம் நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியமும் அளிக்கிறது.
மருத்துவ குணங்கள்
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. மாதுளையில் இலை, பூ, மொட்டு, பிஞ்சு, பழம், பழத்தோல், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடையவை. மாதுளம்பழத்தில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், வைட்டமின்களும், உயிர்ச் சத்துக்களும் உள்ளன.
மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78% உள்ளது. புரதச்சத்து 1.6%, நார்ச்சத்து 5%, கார்போ ஹைட்ரேட் 14.5%, தாதுக்கள் 0.7%, சுண்ணாம்புச் சத்து 10%, மக்னீஷியம் 12%, சிலிக் திராவகம் 14 Mg, கந்தகம் 12%, குளோரின் 20%, தயாமின் 0.46%, பாஸ்பரஸ் 1.33%, செம்பு 0.2%, நிக்கோடினிக் அமிலம் 0.30% வைட்டமின் C சத்து 16 Mg அடங்கியுள்ளது.
கண்ணுக்கு பாதுகாப்பு
மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் பார்வை தெளிவாகும், கண் குறைபாடுகள் நீங்கும், மாலைக் கண்நோய்த் தீரும்.
மாதுளை இலைகளை மையாக அரைத்து கண் மீது தடவினால் கண் நோய் குணமாகும்.
கண்ணை திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கி, இமைகள் ஒட்டிக் கொண்டால், ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின் அந்த தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.
பற்கள் பலப்படும்
மாதுளம்பழம் ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்த் தொற்றுகளை அழித்து, பற்களையும், ஈறுகளையும் பாதுகாக்கும்.
மாதுளம் மரப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் ஈறு நோய்கள் தீரும், பல் வலி குறையும், ஆடும் பற்கள் கெட்டிப்படும்.
மாதுளம் பூக்களைச் உலர்த்தி தூள் செய்து, கால் டம்ளர் தண்ணீரில் அரை தேக்கரண்டி அளவு போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண், தொண்டைபுண் மற்றும் வலி தீரும்.
சரும வளத்தை பேணும்
கற்கண்டு, வெண்ணை, தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் சம அளவு எடுத்து, கடாயில் போட்டு உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்சி எடுத்து, இதை இரண்டு வேளை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற நோய்கள் மறைந்து, சருமம் பழைய நிலையை அடையும்.
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட புண்கள் வடு இல்லாமல் விரைவில் ஆறும்.
இளமைத் தோற்றம்
மாதுளம்பழத்தை தினம் சாப்பிட்டால் வயது அதிகமானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாமல் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
முதுமையின் அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கம் நீங்க மாதுளம்பழச் சாறு மற்றும் வெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகப் பேஸ்ட் போல் குழைத்து, தோலில் சுருக்கம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.
உடல் அழகுக்கு கை கொடுக்கும் மகத்துவம்
தலையில் ஏற்பட்ட புழுவெட்டால் முடி உதிர்ந்து இருந்தால் 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அரைத்துக் கொள்ள வேண்டும், காலையில் குளிக்கும் முன் புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து சாறு எடுத்து தலை முழுவதும் படும்படி நன்றாக தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, குளிக்கும் போது அரைத்து வைத்த விழுதை தலையில் தேய்த்து நீரில் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் செய்தால், புழுவெட்டு நீங்கி முடி வளர ஆரம்பிக்கும்.
மாதுளம்பழத்தின் தோலை நன்றாகக் காய வைத்து பொடியாக்கி, இதனுடன் பாசிப்பருப்பு பொடியை சம அளவு கலந்து, தினமும் குளிப்பதற்கு இந்த பொடியை உபயோகித்தல் வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகும்.
மாதுளை ஜூஸ் ஒரு டீஸ்பூன், சந்தனம் அரை டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.
பருக்களை மறைய வைக்க மாதுளம்பழத்தை உதிர்த்து முத்துக்களை ப்ரீசரில் வைத்து பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் உறைந்துப்போய் இருக்கும் இதை பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் இந்த பொடி, ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பு பொடி, இரண்டையும் எலுமிச்சைச் சாற்றில் கலந்து, முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
வெட்டிவேர் பொடி ஒரு டீஸ்பூன் எடுத்து மாதுளம் பழச்சாறுடன் கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவி வந்தால் பரு வராமல் தடுக்கலாம். .
இருமலுக்கு நிவாரணம்
வறட்டு இருமலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம்பழத்தை சாப்பிட குணமாகும்.
மாதுளம்பழச்சாறு, இஞ்சிச்சாறு சம அளவு எடுத்து தேனில் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் தீரும்.
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடி செய்து, மூன்று வேளை ஒரு சிட்டிகை வீதம் தொடர்ந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
இருதய நோய்க்கு தீர்வு
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துளையிட்டு அதனுள் சமையலுக்கு பயன்படும் பாதாம் எண்ணெயை 15 மில்லிக்கு குறையாமல் செலுத்தி, அந்த பழத்தை இட்லி அவிப்பது போல் அவித்தல் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும் இந்த பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி மற்றும் நீண்ட நாள் இருமல் குணமாகும்.
மாதுளம்பழம் தினம் சாப்பிடுவதால் இருதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்டகொழுப்புகள் தங்காது மேலும் கொழுப்பு அடைப்பு இருந்தால் நீங்கும், இரத்தம் இருதயத்திற்கு தடையில்லாமல் சென்று இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் தடுக்கும்.
மாரடைப்பு ஏற்பட்டவர்கள் தொடர்ந்து மாதுளம்பழம் பழம் சாப்பிட இருதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகும்.
மாதுளம் முத்துக்களை மட்டும் சாப்பிடுவதைவிட அதன் விதை மற்றும் தோல் ஆகிய அனைத்தையும் சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
இரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படும்
நீரழிவு நோயாளிகள் தாராளமாக மாதுளம்பழத்தை சாப்பிடலாம் இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படாது. நீரழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து இரண்டு வாரங்கள் மாதுளை ஜுஸ் கொடுத்து பார்த்ததில் அவர்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள்
பித்த சம்பந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் முத்துக்களையும் மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் தீரும்.
மலச்சிக்களுக்கு தீர்வு
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை விதையுடன் நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
வயிற்றுப்போக்கு
மாதுளம் பழத்தின் தோல், விதை, பூ இவற்றில் ஏதாவது ஒன்றை மை போல் அரைத்து எலுமிச்சம்பழம் அளவு 100மி.லி. எருமை தயிரில் கலந்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் குடித்து வந்தால் சீதபேதி குணமாகும்.
சீதபேதி நோயின் பாதிப்பால் பலவினம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெரும், எடையும் கூடும்.
மாதுளம்பழத் தோலைக் காய வைத்து பொடியாக்கி கால் பங்கு சாதிக்காய் சேர்த்து வெண்ணை அல்லது நெய்யுடன் கலந்து உண்ண சீதபேதி, இரத்தபேதி குணமாகும்.
மாதுளம் பிஞ்சு சாறு 50மி.லி. அருந்த மலத்தில் இரத்தம் வருதல் மற்றும் சீதபேதிக்கு நல்ல மருந்தாகும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி ஏற்பட்டால் மாதுளை மலர் மொட்டுக்களை உலர்த்தி பொடி செய்து கொடுத்தால் நோய் குணமாகும்.
மாதுளம் இலைச்சாறு வயிற்றுப்போக்கினை தீர்க்கும். மாதுளம் செடித் தண்டு மற்றும் வேர்ப்பட்டை கசாயம் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும்.
மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து எடுத்து அதனுடன் சிறிதளவு ஏலம், கசகசாவை சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு, அதில் 10 கிராம் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீதபேதியும் குணமாகும்.
வயிற்றுப் பிரச்சனைகள்
புளிப்பு மாதுளையைச் சாப்பிடுவதால் வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. குடற்புண் மற்றும் எல்லாவகை அல்சர் நோய்களையும் குணமாக்குகிறது.
புளிப்பு மாதுளம் பழத்தோல், சாதிக்காய் சம அளவு எடுத்து வினிகர் சேர்த்து நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்து, தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.
மாதுளம் பழச்சாறு 1 டம்ளர் மற்றும் தேன் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் தீரும், வயிற்றில் உள்ள தேவையற்ற கிருமிகளை வெளியேற்றும்.
மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சி, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் வெளியேறி விடும்.
மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து, இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும்.
மாதுளம்பழம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்ற உறுப்புகளில் புண் இருந்தால் குணமாகும் மேலும் உமிழ்நீரை அதிகம் சுரக்க வைத்து ஜீரணத்தை ஒழுங்குபடுத்தும்.
மாதுளம் விதை மற்றும் உட்சதைப்பற்று வயிற்று வலியினை போக்கும்.
மூல நோய்க்கு நிவாரணம்
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லி எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் ஆசனக்கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, மலம் கழித்தபின் எரிச்சல், மூலம், இரத்த மூலம் ஆகியவை ஒழியும். உடல் சூடு தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் தீரும். (பத்துப் பூக்களை ஒரு குவளை நீரில் பாதியாகச் சுண்டுமளவுக்குக் காய்ச்சி கற்கண்டு சேர்த்துக் குடித்தாலும் இதே பலன் கிட்டும்).
மாதுளம்பூச்சாறு 300மில்லி, பசு நெய் 200 கிராம் சேர்த்து கடாயில் போட்டு, பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை தொடர்ந்து இருபது தினங்கள் இந்த நெய்யை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் தீரும். இரண்டு மாதம் சாப்பிட்டால் கடுமையான சயரோகப்பாதிப்பு (காசநோய்) படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும்
மாதுளம் இலை கசாயம் மூல நோயிலிருந்து காக்கும்.
சிறுநீரகப் பிரச்சனைகள்
மாதுளம்பழச் சாறு ஒரு டீஸ்பூன், அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறு சேர்த்து சாப்பிட்டால், சிறுநீரகக்கல் பிரச்சனை தீருமாம்.
சிறுநீர் வெளியேறாமல் கஷ்டப்படுபவர்கள் புளிப்பு மாதுளையைச் சாப்பிட்டால் தடைநீங்கி சிறுநீர் எளிதாக வெளியேறும். நீர்க்கடுப்புக்கும் நல்ல பலன் தரும்.
மாதுளம் பழச்சாறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் கட்டுப்படுகிறது.
இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்
நாள்ப்பட்ட நோயின் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள், மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை வேளையில் அருந்தினால், ஒரு மாதத்தில் உடல் ஆரோக்கியம் அடையும் புது ரத்தம் உற்பத்தியாகும்.
மாதுளம்பழத்தில் உள்ள வைட்டமின் C சத்து இரத்த உற்பத்திக்கும், இரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கும் உகந்தது.
மாதுளம்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கும்.
மாதுளம்பழத்தில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து இரத்தச் சோகையை குணப்படுத்தும்.
எடையை குறைக்கும்
மாதுளையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டு வந்தால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, தசையும் இறுகும்.
மாதுளம்பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு உடலில் மேலும் கொழுப்பு சேராமல் பாதுகாக்கும், குண்டானவர்கள் அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
புற்றுநோயை தடுக்கும்
மாதுளம்பழம் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. . ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய்யை - Prostate Cancer (சிறுநீர்ப் பையை சுற்றி ஏற்படும் புற்றுநோய்) தடுக்கும் வல்லமை மாதுளம்பழத்திற்கு உண்டு.
மாதுளம்பழம் நம் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, நோய் தாக்கம் இருப்பின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து மேலும் பரவாமல் பாதுகாக்கிறது, இறந்த செல்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்தி நோயின் பாதிப்பிலிருந்து வெளிவர உதவுகிறது.
உடல்ச் சூடு நீங்கும்
மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியை தரும்.
மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும், அதிக தாகத்தைப் போக்கும்.
பெண்கள் மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் வெப்பநோய், தலைவலி தீரும்
பெண்களுக்கான குறிப்புகள்
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பப்பை நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
கருவுற்றிருக்கும் பெண்களின் மசக்கை, வாந்திக்கு மாதுளம்பழம் சிறந்த மருந்து.
பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து 30 மில்லி வீதம் மூன்று வேளை மூன்று தினங்களுக்குக் கொடுக்க தீரும், மூக்கிலிருந்து இரத்தம் வடியும் பிரச்சனை உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் வெல்லம் 25 கிராம் சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பழச்சாறு கர்ப்பக் காலத்தில் ஏற்படும் இரத்த சோகையை சரிசெய்யும். குழந்தை பெற்றபின் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாறுடன் சிறிதளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்ட வேண்டும்.
கர்ப்பிணிகள் தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிடுவதால் தாய்க்கும், சேய்க்கும் கிடைக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.
மாதுளம்பழம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை தீர்க்கும்.
ஆண்களுக்குக் குறிப்புகள்
ஆண் தன்மை பாதிப்பு உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிட்டால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து உடலுக்கு சக்தியை கொடுக்கிறது.
மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
மேக நோய்
மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் (வெட்டை நோய் என்னும் பால்வினை நோய்) பாதிப்பு நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.
மயக்கம் தெளியும்
அடிக்கடி மயக்கம் ஏற்படும் தன்மை உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தீரும்.
அளவுக்கு மீறிய போதையில் மயங்கி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாற்றைக் கொடுத்தால் போதை தெளியும்.
மயக்கம், தலைசுற்றல் தீர மாதுளம்பழச்சாறு 100 மில்லி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் மேலும் பிரயாணத்தின் போது வாந்தி வருவது போன்ற உணர்வு, அடக்கடி ஏற்படும் தொண்டை வறட்சி, புளிச்சயேப்பம், வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கும் பயன் தரும்.
மாதுளம் பூ
மாதுளம்பூ கசாயம் அருந்தினால் இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு தீரும், உடல் சூடு தணியும், இரத்தம் சுத்தம் அடைந்து இரத்த விருத்தி உண்டாகும்.
உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு, மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும், இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும்.
மாதுளம்பூக்கள், அறுகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம் சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து, 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சிறிது சேர்த்துக் கலக்கி காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜி, மூலச்சூடு, வெட்டைநோய், நீர்க்கடுப்பும் குணமாகும்.
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால் உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் தீரும்.
முழு மாதுளம்பழத்தை சாப்பிடலாமா ?
மாதுளம்பழம் என்றாலே அதன் முத்துக்களின் சாறை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்து விடுவோம், ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில் தான் உள்ளது. அதனால் விதைகளையும் மென்று சாப்பிட வேண்டும். மேலும் அதன் தோலையும் சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும், முடியாத பட்சத்தில் தோலை பதப்படுத்தி சாப்பிடலாம்.
மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மாதுளம்பழம் மணப்பாகு
பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சர்க்கரை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சர்க்கரையை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து மீண்டும் பாகுபதம் வரும் வரை சூடு செய்து, பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும். பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி கரு வளர்ச்சிக்கு உதவும் இரத்த விருத்தி ஏற்படும்.
மாதுளம்பழச் சாறு
மாதுளம்பழம் சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும்.
மாதுளம்பழச் சாறு எடுத்து தேன் அல்லது கற்கண்டு சேர்த்து அருந்தலாம், மாதுளம்பழச் சாற்றல் ஏற்படும் நன்மைகள் :
செரிமானத் திறன் குறைந்தவர்கள், அடிக்கடி மலம் கழிப்பவர்கள், அதிக உடல் எடை மற்றும் ஓய்வற்ற உழைப்பால் மன உளைச்சல், உடற்சூடு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், பித்தத்தால் ஏற்படும் வாந்தி, குமட்டல், மயக்கம், விக்கல், வாய்நீர்ச் சுரப்பு, நெஞ்சுச் எரிச்சல், புளிச்சயேப்பம், காதடைப்பு, போன்ற தொல்லைக்கு தொடர்ந்து அருந்த குணமடையலாம்
காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் ஒரு மாதம் அருந்தினால் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்து அருந்தி வந்தால் நினைவாற்றல் பெருகும்.
மாதுளை பழத்தின் தோலை உரித்து சாப்பிடுவதற்கு சோம்பல்பட்டு, பலர் அதனை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வேறு பழங்களை வாங்கி உட்கொள்கின்றனர். எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைப்பதை விட, கஷ்டப்பட்டு அடையும் போது தான் அதன் அருமை தெரியும். அதுப்போல் தான் மாதுளையை கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டியிருந்தாலும், அதனால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம். அதிலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக செய்து குடித்தாலும், அதன் நன்மைகள் ஒன்றே. உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்’ என அழைக்கிறார்கள்.
மாதுளை பொறாமையையும் பகையுணர்வையும் நம்மிடம் இருந்து நீக்கும் ஆற்றல் படைத்தது எனவே அதனை விரும்பி உண்ணுங்கள் என முகமது நபி அவர்கள் கூறியிருக்கிறார்.

- நினைவாற்றல் பெருகும்.
- நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்களின் உடல் நலம் தேறி உடல் எடை கூடும்.
- தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
- உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.
- விக்கல் ஏற்படும் போது சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
- கால்சியம் உடலில் சேருவதற்கு உதவுவதால் பற்களும், எலும்புகளும் உறுதிப்படும்.
- இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.
- நாள்பட்ட நோய்களின் தீவிரமும் குறையும்.
- ஆண்களுக்கும் பெண்களுக்கும் பால் உணர்வுகளை தூண்டும் ஆற்றல் பெற்றது.
- இரத்த ஓட்டத்திற்கு ஏற்றது மாதுளை.
- உடலுக்கு சக்தியை தரக்கூடியது மாதுளை.
- உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் (மந்தநிலை) தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது.
மாதுளம்பழம் மணப்பாகு பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சர்க்கரை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சர்க்கரையை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து மீண்டும் பாகுபதம் வரும் வரை சூடு செய்து, பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும். பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி கரு வளர்ச்சிக்கு உதவும் இரத்த விருத்தி ஏற்படும்.
மாதுளம்பழச் சாறு
மாதுளம்பழம் சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும்.
மாதுளம்பழச் சாறு எடுத்து தேன் அல்லது கற்கண்டு சேர்த்து அருந்தலாம், மாதுளம்பழச் சாற்றல் ஏற்படும் நன்மைகள் :
செரிமானத் திறன் குறைந்தவர்கள், அடிக்கடி மலம் கழிப்பவர்கள், அதிக உடல் எடை மற்றும் ஓய்வற்ற உழைப்பால் மன உளைச்சல், உடற்சூடு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், பித்தத்தால் ஏற்படும் வாந்தி, குமட்டல், மயக்கம், விக்கல், வாய்நீர்ச் சுரப்பு, நெஞ்சுச் எரிச்சல், புளிச்சயேப்பம், காதடைப்பு, போன்ற தொல்லைக்கு தொடர்ந்து அருந்த குணமடையலாம்
காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் ஒரு மாதம் அருந்தினால் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்து அருந்தி வந்தால் நினைவாற்றல் பெருகும்.
மாதுளை பழத்தின் தோலை உரித்து சாப்பிடுவதற்கு சோம்பல்பட்டு, பலர் அதனை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வேறு பழங்களை வாங்கி உட்கொள்கின்றனர். எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைப்பதை விட, கஷ்டப்பட்டு அடையும் போது தான் அதன் அருமை தெரியும். அதுப்போல் தான் மாதுளையை கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டியிருந்தாலும், அதனால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம். அதிலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக செய்து குடித்தாலும், அதன் நன்மைகள் ஒன்றே. உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்’ என அழைக்கிறார்கள்.
மாதுளை பொறாமையையும் பகையுணர்வையும் நம்மிடம் இருந்து நீக்கும் ஆற்றல் படைத்தது எனவே அதனை விரும்பி உண்ணுங்கள் என முகமது நபி அவர்கள் கூறியிருக்கிறார்.
வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக