தாவர தங்கம் கேரட்
மக்கள் இயற்கை உணவுகளை தவிர்த்து, எண்ணெயில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என பல உணவுகளை இன்று அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர், போதாக்குறைக்கு வைட்டமின் டானிக் மற்றும் மாத்திரை என உட்கொள்கின்றனர். இதனால் பல வகையான வியாதிகள் உடலில் ஏற்படுகின்றன. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை அடையலாம் என்பதில் ஐயமில்லை.
உணவே மருந்து என்ற அடிப்படையில் பூமிக்கடியில் புதையலாய் பொதிந்து கிடக்கும் காய்கறிகளில் வேர்க்காய் வகையை சார்ந்த கேரட் ஒரு சத்தான கிழங்காகும். கேரட் செடியானது தனது வேரில் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் 5 முதல் 10 செ.மீ. நீளம் உள்ள பல சில்லடை வேர்களைக் கொண்ட கூம்பு வடிவில் பருத்த கிழங்காக கேரட்டை நமக்கு தருகிறது. பல்வேறு சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன கேரட் உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், இரத்த அழுத்தம் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவி புரிகின்றன.
கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்
இயற்கையில் இனிப்பு சுவையுடைய கேரட் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காயாகும். கேரட்டில் அடங்கியுள்ள சத்து விவரங்களை பார்ப்போம்.
100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:
கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை பார்த்தல் நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். இதில் வைட்டமின் A சத்து உள்ளதால் கேரட்டை சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு, கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும்.
கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.
கேரட்டில் உள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் கண் புரை நோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை பீட்டாகேரட்டின் தடுக்கிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகளை விட கூடுதல் பலனை தருகிறது கேரட்.
கேரட்டை வேகவைத்தோ அல்லது பச்சையாக அடிக்கடி உண்டு வந்தால் பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மை நீங்கி கண் பார்வை கூர்மையாகும், 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்தை தீர்க்கும்.
கேரட் சாப்பிடுவதன் மூலம் இரவு நேரத்திலும் கண்பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டாது.
மூளை சுறுசுறுப்படையும்
கேரட் சாறுடன் பாதாம் பருப்பை தூள் செய்து கலந்து அருந்தி வந்தால், மூளை சுறுசுறுப்படையும், ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும், மூளை பலமடையும். பைத்தியம் குறைக்கும் நிவாரணியாகவும் இருக்கும்.
கேரட் மூளைச் சூட்டைத் தணித்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும்.
பல் பராமரிப்பு
கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால், பற்கள் வலுவடைவதோடு பற்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கேரட்டை அடிக்கடி பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும். ஈறுகளும் பலப்படும்.
நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்களை நீக்கி பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.
இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள்
கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்
கேரட் இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி, விருத்தி அடையச் செய்கின்றது.
கேரட் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையை நீக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.
இரத்தப் புற்றுநோய்க்கு தினமும் கேரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, இரத்த கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்
இருதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்
கேரட் சாப்பிட்டால், இருதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் பாதுகாத்து மாரடைப்பு மற்றும் இருதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.
கேரட் இதயத் துடிப்பைச் சீராக்கும். இருதயநோய் அணுகாமல் காக்கிறது.
வயிற்றுக் கோளாறுகள்
கேரட்டை வாரத்தில் இரண்டு நாட்கள் சமையலில் பயன்படுத்தினால் இதில் உள்ள நார்ச்சத்து நல்ல ஜீரண சக்தியை தரும்.
செரிமான பிரச்சனை இருந்தால் தினம் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து உணவை எளிதில் ஜீரணக்கச் செய்யும்.
நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் போன்ற வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
கேரட் ஜுஸ் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வாயுத் தொல்லை, மூல நோய் விரைவில் குணமடையும்.
கேரட் தயிர் பச்சடியாக மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். கேரட் தயிர் பச்சடி குறிப்பு கடைசியில் பார்க்கவும்.
தினமும் காலை வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடல் புழுக்கள் மற்றும் வயிற்று பூச்சிகள் வெளியேறும்.
அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறு எடுத்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் குணமாகும்.
வாயில் துர்நாற்றம் இருந்தால் அதற்கு காரணம் வயிற்றிலிருக்கும் கோளாறுதான் எனவே வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறினை சர்க்கரை, உப்பு சேர்க்காமல் அருந்தினால் வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கி வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
சாப்பிட பின்னும் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும் நபர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வர தீரும். பசி எடுக்கும் சமயத்தில் ஒரு காரட் சாப்பிட்டால் பசி அடங்கும்.
வயிற்றோட்டத்திற்கு, கேரட் 1/4 கிலோ எடுத்து சுத்தம் செய்து குக்கரில் தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து, அந்த வேகவைத்த நீருடன் சிறுது உப்புச் சேர்த்து, 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு ஸ்பூன் வீதம் குடித்தால் சரியாகும். வயிற்றோட்டத்தின் மூலம் இழந்த சத்துக்களையும் இந்த சூப் ஈடு செய்யும்.
உணவு உண்டப்பின் ஒரு கேரட்டை சாப்பிட உடலில் இருக்கும் தேவையற்ற கிருமிகள் வெளியேறும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம்.
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர, இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும் மூலநோயின் தாக்கத்தையும் குறைக்கும்.
கேரட் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறு, புதினாசாறு கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகள் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
கேரட் இன்சுலினை இயற்கையாக சுரக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகள் தாராளமாக கேரட்டை சாப்பிடலாம்.
விந்தணுக்களை அதிகரிக்கும்
ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு மற்றும் தரம் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பது நல்லது.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
உடல் எடை குறையும்
கேரட்டை உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கும் அதனால் சாப்பிடும் அளவு குறைந்து உடலில் உள்ள அதிகபடியான சதை குறையும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கேரட் வெளியேற்றும் மேலும் சேரவிடாமல் பாதுகாக்கும்.
அழகுக்கலை
கேரட்டை தாவரத் தங்கம் என்று சொல்லலாம், ஏன்னெனில் கேரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி தங்கம் போல் பளபளப்பாகும்.
சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.
கேரட்டை அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகப்பரு, முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளப்பாகும் சிவப்பழகு கூடும்.
கருப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் அடிக்கடி அருந்த அவர்களின் நிறம் சிறிது மாறும்.
கேரட் சாப்பிட்டு வந்தால் மேனியில் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும் மாறும்.
இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுத்து அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் பொன்னிறமாகும்
தினமும் கேரட் ஜூஸ் குடித்து வர, இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றம் மாறும்.
கேரட்டில் சர்க்கரை சேர்த்து, மையாக அரைத்து, அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
வலியுடைய மூட்டு வீக்கம்
மூட்டு வீக்கம் மற்றும் வலிக்கு, தினமும் கேரட்டை சாப்பிட்டு வர இதில் உள்ள வைட்டமின் சி, மூட்டு வீக்கத்தை குறைத்து வலியை நீக்கும், மேலும் எலும்புகளை வலுவாக்கும்.
இரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கேரட் சாறு கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் நீங்கி குணம் பெறலாம். .
புற்றுநோயை தடுக்கும்
கேரட் புற்றுநோய் வராமல் காக்கும், ஆரம்ப நிலை நோயாக இருப்பின் முற்றாமல் காத்து, புற்றுநோய் செல்களை அழித்து நோயிலிருந்து விடுபடலாம்.
கேரட் புற்றுநோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்கும் , நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது. கேரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது.
கேரட் சாப்பிடுவதன் மூலம் நுரையீரல், பெருங்குடலில், மார்பகப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது.
நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். எனவே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.
பெண்களுக்கு
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும்.
மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் பேருதவி புரியும்.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கேரட்டிற்கு உள்ளது.
கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. இரத்த சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும். தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்துள்ளது
உடல் சூடு
கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.
குழந்தைகள் சாப்பிட்டால்
கேரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பசும் பாலில் போட்டு அவித்து கேரட்டை மசித்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் பலப்படும். வளர்ச்சி சீராகும். இளைப்பு நீங்கி உடல் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்.
உடல் வலிமை அடையும்
நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும். இந்த பச்சைக் கேரட் ஜூஸ் நம்முடைய உடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்ததை உற்பத்தி செய்யும்.
கேரட்டை சிறு துண்டாக வெட்டிப் பசும் பாலில் போட்டு காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து அருந்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீர்ப் பிரச்சனைகள்
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும். சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும்.
கேரட் ஜூஸ்
உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. ஜூஸ் போட்டு அருந்த விரும்பினால் உடனுக்குடன் ஜூஸ் போட்டு அருந்துவது சிறந்த பலனை கொடுக்கும். ஒரு வாரத்திற்கு 5 கிளாஸ் என்ற கணக்கில் அருந்தினால் போதுமானது அதிகம் அருந்தினால் மூலதொந்திரவு ஏற்படும். சருமம் மஞ்சள் நிறமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
.
கேரட் ஜுஸ் தயாரிக்கும் முறை
கேரட்டில் வைட்டமின் A சத்து தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், கேரட்டை துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது தேங்காய்ப் பால் எடுப்பது போல் ஜூசை எடுக்க வேண்டும்) ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு கலந்து, இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸில் சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து பருகலாம் அல்லது மிளகு சீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம். குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.
கேரட் வைத்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.
காரட் மில்க் ஷேக் 1:
ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப் கேரட் துருவல் கால் தேக்கரண்டி ஏலக்காயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதோடு தேவையான அளவு தண்ணீர், கற்கண்டு கலந்து பரிமாறவும். தேங்காய்க்கு பதில் பாலும் பயன்படுத்தலாம்.
காரட் மில்க் ஷேக் 2:
இரண்டு கேரட்டை துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும், 4 பாதாம் பருப்பை தண்ணிரில் ஊற வைத்து தோல் நீக்கவும். ஒரு டம்ளர் பால் எடுத்து, அவித்த கேரட் துருவல் மற்றும் பாதாமுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு மீதியுள்ள பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம், இரண்டு ஐஸ் க்யூப்கள், ஒன்றரை மேசைக்கரண்டி பொடித்த சீனி, ஒரு சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து கலந்து பரிமாறவும்.
கேரட் சட்னி
தேவையானப்பொருட்கள்:
கேரட் – 2
நம் தேவைக்கு ஏற்ப கேரட்டை எடுத்து நன்றாக சுத்தம் செய்து துருவி எடுத்து, அதனுடன் 4 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப எடுத்து இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து, கொத்தமல்லி இலை இரண்டு இணுக்கு, இஞ்சி ஒரு சிறு துண்டு மசித்து வைத்து, தேவையான அளவு உப்பு அனைத்தையும் மோரில் கலந்து ஊறவைத்தால் கேரட் தயிர் பச்சடி ரெடி. 1 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் புற்றுநோயும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
கேரட் உடன் அதன் உச்சியில் இருக்கும் கேரட் கீரையும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அக்கீரையையும் சமைத்து உண்ணலாம். இதை மிக அதிகமாகத் சாப்பிட்டால் பித்தமாகும்..
சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சக்தி 41 கலோரிகள்
கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்
வைட்டமின் A - 93% (835 m.g.)
பீட்டா கரோட்டின் - 77% (8285 m.g.)
வைட்டமின் B1 - 3% (0.04 m.g.)
வைட்டமின் B2 - 3% (0.05 m.g.)
வைட்டமின் B3 - 8% (1.2 m.g.)
வைட்டமின் B6 - 8% (0.1 m.g.)
வைட்டமின் B9 - 5% (9 m.g.)
வைட்டமின் C - 12% (7 m.g.)
கால்சியம் - 3% (33 m.g.)
இரும்புச் சத்து - 5% (0.66 m.g.)
மங்கனீஷ் - 5% (18 m.g.)
பாஸ்பரஸ் - 5% (35 m.g.)
பொட்டாசியம் - 5% (240 m.g.)
சோடியம் 2.4 m.g.)
கண்களுக்கு ஆரோக்கியம் தரும்

- காரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.
- தலைமுடி உதிர்வதை தடுக்கும் முடியும் நீளமாக வளரும்.
- உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
- நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது.
- வாயுப் பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும். ஹெர்ண்யா வராது.
- கல்லீரல் மற்றும் வயிற்றில் புண்கள், சிறுநீரக கற்க்கள் நீங்க கேரட் ஜூஸ் நல்ல மருந்து.
- வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் வராமல் பாதுகாக்கும்.
- நரம்புகள் பலப்படவும், தலைச்சுற்றல், மயக்கம் வராமல் தடுக்கும்.
- நெஞ்சுவலி, மூட்டு வலி முதுகுவலி மறையும்.
- சூதகக் கட்டு (மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலி) ஏற்படாமலிருக்கவும், மாத விலக்கு சரியான கால இடைவெளியில் ஏற்படும்.
- ஒல்லியானவர்கள் மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்தவும்.
- அதிக சுண்ணாம்புச் சத்து காரட்டில் உள்ளதால் எலும்புகள் உறுதியாகும் பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம்.
- முதுமையில் ஏற்படும் கால்சிய இழப்பை சரிகட்டி உடல் பலவீனத்தை போக்கும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.
- கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
- தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க செய்யும்.
கேரட் வைத்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.
காரட் மில்க் ஷேக் 1:
ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப் கேரட் துருவல் கால் தேக்கரண்டி ஏலக்காயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதோடு தேவையான அளவு தண்ணீர், கற்கண்டு கலந்து பரிமாறவும். தேங்காய்க்கு பதில் பாலும் பயன்படுத்தலாம்.
காரட் மில்க் ஷேக் 2:
இரண்டு கேரட்டை துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும், 4 பாதாம் பருப்பை தண்ணிரில் ஊற வைத்து தோல் நீக்கவும். ஒரு டம்ளர் பால் எடுத்து, அவித்த கேரட் துருவல் மற்றும் பாதாமுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு மீதியுள்ள பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம், இரண்டு ஐஸ் க்யூப்கள், ஒன்றரை மேசைக்கரண்டி பொடித்த சீனி, ஒரு சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து கலந்து பரிமாறவும்.
கேரட் சட்னி
தேவையானப்பொருட்கள்:
கேரட் – 2
காய்ந்த மிளகாய் – காரம் தேவைக்கு ஏற்ப
புளி – தேவையான அளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
கேரட்டைக் கழுவி, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வதக்கவும். கடைசியில் காரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு விநாடிகள் வதக்கி, இறக்கி ஆற விடவும். ஆறிய பின் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.
கேரட் தயிர் பச்சடி
புளி – தேவையான அளவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
கேரட்டைக் கழுவி, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வதக்கவும். கடைசியில் காரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு விநாடிகள் வதக்கி, இறக்கி ஆற விடவும். ஆறிய பின் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.
கேரட் தயிர் பச்சடி
நம் தேவைக்கு ஏற்ப கேரட்டை எடுத்து நன்றாக சுத்தம் செய்து துருவி எடுத்து, அதனுடன் 4 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப எடுத்து இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து, கொத்தமல்லி இலை இரண்டு இணுக்கு, இஞ்சி ஒரு சிறு துண்டு மசித்து வைத்து, தேவையான அளவு உப்பு அனைத்தையும் மோரில் கலந்து ஊறவைத்தால் கேரட் தயிர் பச்சடி ரெடி. 1 மணி நேரம் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் புற்றுநோயும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
கேரட் உடன் அதன் உச்சியில் இருக்கும் கேரட் கீரையும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அக்கீரையையும் சமைத்து உண்ணலாம். இதை மிக அதிகமாகத் சாப்பிட்டால் பித்தமாகும்..
சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இயற்கை உணவுக்கு மாறுவோம் நோயை வெல்வோம் !
வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக