திங்கள், 30 நவம்பர், 2015

Diabetes Natural Remedies - இயற்கை முறையில் நீரழிவு நோயை குணப்படுத்த


நீரழிவு என்றால் என்ன?


உலகில் உள்ள மக்களில் பெரியவர் முதல் சிறியவர் வரை அதிகமானவர்களை பாதிக்கும் ஒரு வியாதி என்றால் அது Sugar என்று சொல்லகூடிய நீரழிவு நோய். இந்நோயை சர்க்கரை நோய் மற்றும் மதுமேகம் என்றும் கூறுவார்கள். 

நீரழிவு நோய் நம் உடலில் உருவாக காரணம் என்னவெனில்,  நமது உடல், இரத்தத்திலுள்ள குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகின்றன,  இரத்த குளுக்கோஸை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றக்கூடிய வேலையை இன்சுலின் என்னும் சுரப்பி செய்கிறது.  இந்த இன்சுலின் சரியாக சுரக்காமல் போகும் பொழுது  நமது உடலால் இரத்த  குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற முடியாமல் போகிறது இந்த நிலையை  நீரழிவு என்று கூறலாம்.  


நீரழிவின்  வகைகள்.... 


  • டைப் 1 நீரழிவு நோய் [Type 1 Sugar] இது நமது உடலில் இன்சுலின் சுரப்பி மொத்தமாக சுரக்காத நிலை, டைப் 2 நீரழிவு நோய் [Type 2 Sugar] இது இன்சுலின் கம்மியாக சுரக்கும் நிலை.
  • உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்பட்ட இரத்த குளுக்கோஸ் தவிர உடலில் தங்கும் குளுக்கோஸ் கழிவாக வெளி ஏறாமல் உடலில் தங்கினால் ஹை சுகர் [High Sugar] என்றும் தேவைக்கு குறைவாக இரத்த குளுக்கோஸ் கிடைத்தால் அது லோ சுகர் [Low Sugar] என்றும் அழைக்கப்படுகிறது. 


இது நீரழிவு நோயை பற்றி நாம் எளிமையாக தெரிந்து கொள்ள கூடிய விஷயம்.


இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகமாக அல்லது குறைவாக இருப்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? 


  • திடீரென்று மயக்கம் ஏற்பட்டால் அதுவும் உணவு உண்ணும் நேரம் சிறிது தாமதம் ஆகும்போது ஏற்படும் தலைசுற்றுடன் கூடிய மயக்கம்.  
  • ஒரு நாளில் அதிகமாக சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரங்களில். 
  • வழக்கத்தைவிட அதிகமாக தாகம் எடுத்தல்.
  • களைப்பாக உணர்தல். 
  • உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைதல். 
  • வெட்டுக் காயங்கள் மற்றும் புண்கள் ஆறுவதற்கு அதிக நாட்களாகும் போது.


நோயை உணர்ந்த பின் என்ன செய்ய வேண்டும்.



நீரிழிவைக் குணப்படுத்த முடியாது, ஆனால் அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க என்ன செய்ய வேண்டும் அன்று பார்போம்.



  • உங்கள் உணவில் நீங்கள் மாற்றங்களைச் செய்வதுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். 

  • உடற்பயிற்சி செய்யுங்கள், அதாவது நடைபயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஜாக்கிங் இவற்றில் உங்களுக்கு முடிந்த பயிற்சியை செய்யவும், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம்.
  • நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவை ஒரே சமயத்தில் சாப்பிடாமல் 2 மணி நேரம் இடைவெளி விட்டு பிரித்து உண்ணவேண்டும். 
  • நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கறிகள், பழம், சர்க்கரை சேர்க்காத பழச்சாறு,  பருப்பு மற்றும் பயிறு ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள். 
  • வாழைத்தண்டு அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சிறு குறிஞ்சாங் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும் இதனை வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
  • இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். 
  • கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு மோர் அருந்த  நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நடுக்கம் தீரும்.  
  • அசைவ பிரியர்கள் மீனை தாராளமாக உண்ணலாம் [எண்ணெயில் பொறித்த மீனை தவிர்க்கவும்] கொழுப்பு நீக்கிய இறைச்சியைக் குறைவாக சாப்பிடவும் (தவிர்ப்பது நல்லது). 
  • தாவர மற்றும் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு உபயோகியுங்கள், ஆனால் அதையும் குறைவாகவே பயன்படுத்துங்கள்.
  • பிஸ்கெட்டு, சாக்லேட், எண்ணெயில் பொறித்த மொறுமொறுப்பான பண்டங்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள சிற்றுண்டிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். 
  • பால் உபயோகிக்கும் போது கொழுப்பு நீக்கிய அல்லது பாதியளவு கொழுப்பு நீக்கிய பாலைப் பயன்படுத்துங்கள்.
  • செயற்கைப் பானங்கள், மில்க் ஷேக்குகள் மற்றும் சர்க்கரை சேர்த்த பானங்களுக்கு பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.
  • கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவை சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையும் தவிர்க்கவும். 
  • வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதிர்கள் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஓரே இடத்தில் அமர வேண்டாம். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும் [முடியாத பட்சத்தில் இறங்கும்போது  தவிர்க்கவும்]. 
  • சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும் இவர்களை எளிதில் பிற நோய் தாக்கும், எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
  • அதிக உடல் எடை இருந்தால், அதைக் குறைக்க வேண்டும் அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
  • உங்களுக்கு புகை, மது மற்றும் போதை பழக்கம் இருந்தால்  நிறுத்திவிடுங்கள்.


நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய இயற்கை   மருந்துகள்...

மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நாவல்பழக் கொட்டை :

நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி :

மாமரத்தின் தளிர் இலைகளை உலர்த்தி  பொடி செய்து வைத்துக் கொண்டு. அந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலையில் அருந்தி  வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம்பூ பொடி :

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை கலந்து வைத்து கொள்ள வேண்டும் அந்த கலவையை தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இசங்கு வேர் :



இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை : 


நீரழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் நல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அந்த வெந்தயம் மற்றும் நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்கலாம்.

அவரைக்காய் :

பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதாம் பருப்பு :

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகும்.

ஆவாரம்பூ :

ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம் அல்லது காலையில் 5 ஆவாரம்பூவை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம் அல்லது ஆவாரம்பூவை காயவைத்து பொடி பண்ணி சுடு நீரில் கலந்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

தினம் டீ குடிப்பதற்கு பதில் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய் சேர்த்து டீ போல் அருந்தலாம் [பால் சேர்க்க கூடாது டீ வாசனை வேண்டும் என்றால் சிறிது டீ தூள் சேர்த்து கொள்ளலாம்].


கோவைக் காய் மற்றும் பழம் : 

கோவைக் காயை பொரியல் செய்து  உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும், கோவைப் பழமும் நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு நல்லது.

கொய்யா பழம் :

இப்போதைய உணவுப் பொருட்களில் இரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யா சாப்பிட்டால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளைப் பலப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பழம்.

பாகற்காய் பொடி: 

பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒரு சில பொடிகள் சர்க்கரை நோய் குணப்படுத்தும் சக்தி உடையது, இவற்றை சுடு நீரில் கலந்து குடிக்கலாம், அவை

சிறியாநங்கை பொடி

கருஞ்சீரகப்பொடி

வெந்தய பொடி



மருந்தே வேண்டாம்....



உணவு கட்டுப்பாடு மிக அவசியம் அதாவது கண் பார்த்த உணவை எல்லாம் உண்ண ஆசை படக் கூடாது மேலும் உடற்பயிற்சி மிக முக்கியம்.

வெண் சர்க்கரையை (சீனியை)  உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

இந்த கட்டுரை மூலம் நீரழிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி,   நீரழிவு நோய் பற்றிய  பயம் மற்றும் நீரழிவு இல்லாத வாழ்க்கையை இதை படித்தவர்கள் பெற வேண்டும் என்பது எனது நோக்கம்.

எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முக்கியமான முதலுதவி சிகிச்சை.



வியாழன், 26 நவம்பர், 2015

Easy way to reduce Obesity - எளிய முறையில் உடல் எடையை குறைக்கும் வழிகள்

அதிக கொழுப்பு மற்றும் கலோரி நிறைந்த உணவை சாப்பிடும்போது, உடலின் தேவைக்கு அதிகமான கலோரிகள் பயன்படுத்தப்படாமலும் கொழுப்பு உடலில் சேர்வதாலும் உடல் பருமன் என்ற ஒபிஸிட்டி ஏற்படுகிறது.

உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் சிறந்தது உடற்பயிற்சி, அதிலும் நடைபயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும் இது இயற்கையாக உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் கீழ் கண்ட முறைகளை எதாவது ஒன்றை கடைபிடித்தால் நல்ல பலனை அடையலாம்..... 



  • தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலை யை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.
  • காலையில் வெறும் வயற்றில் ஒரு கிளாஸ் மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், உடல் இளைக்கும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் கரைத்து விடும்.
  • இஞ்சியை சாறு பிழிந்து, தேவையான அளவு தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைத்து. காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், தொப்பை குறைந்து விடும்.
  • ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதை வடிகட்டி சாறு எடுத்து வெறும் வயிற்றில் அருந்தவும் இந்த முறையை பத்து நாட்கள் தொடர்ந்து வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
  • உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப் 
காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது ஒபிஸிட்டிக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது. சுக்கு சூப் செய்வது சுலபம்தான்.
ஒரு டேபிள்ஸ்பூன் சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.


உணவின் போது கவனிக்க வேண்டிய பழக்கங்கள் ......

  • காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க சரியான வழி அல்ல ஆகவே காலை உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ள வேண்டும். காலை உணவு தான் நமக்கு அன்றைய தினம் முழுவதும் வேலை செய்ய சக்தியை கொடுகிறது. 
  • இடை இடையே நாம் எடுத்துகொள்ளும் நொறுக்குத் தீனியை தவிர்த்து எதாவது ஒரு பழத் துண்டுகளை ஒரு கப் அல்லது இரண்டு கப் சாப்பிட்டு வந்தால் போதும் பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.
பழங்களில் உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம் மற்றும் உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் ஆகியவை கிடைக்கிறது
  • உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனம் விரும்பாது.
  • முடிந்தால் மதியம் சாப்பாட்டுடன் பாசிப்பருப்புக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம். சுண்டலும் பருப்பும் பசி எடுக்காதபடி தவிர்ப்பதால் அதிகம் சாப்பிட ஆசை இருந்தாலும் இந்த இரு உணவுகளும் சாப்பிட முடியாமல் தடுத்துவிடும் . உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல்  உடல் எடை குறைவதை உணர முடியும். 
  • எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
உணவை குறைக்கும் போது சக்தி இழக்காமல் இருக்கும் ஆனால், ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பு எரிந்துவிடும்.

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

  • தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு (பெருஞ்சீரகம்) கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள அதிக படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
  • அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
  • சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • உடலிலுள்ள கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
  • பப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிட உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் சீராகும்.
  • மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
  • அன்றாடம் குடிக்கும் தேநீரில் பால் சேர்க்காமல் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
  • வாழைத்தண்டு சாறு மற்றும் அருகம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
  • வில்வ இலையை காயவைத்து பொடி செய்து வெண்ணீரில் கலந்து அருந்தலாம்.
  • ஒரு டம்ளர் மிதமான சுடுநீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, இதனை தினமும் குடிக்கலாம்.
  • இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
  • சாப்பிட உடன் ஒரு கிளாஸ் சூடான நீரை குடித்து வந்தால் இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
  • உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பழ வகைகள், பச்சை காய்கறிகள் - தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளவற்றை அதிகம் சாப்பிட வேண்டும், இப்படி செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து உடலும் மெலிந்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.



செவ்வாய், 24 நவம்பர், 2015

Women's Health Tips 50 - பெண்களுக்காக… 50 முக்கிய குறிப்புகள்

பெண்களுக்காக… 50 முக்கிய குறிப்புகள்

முடி அடர்த்தியாக வளர....!

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான்.

இன்றைய அவசர உலகில் பெண்களுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.

மேலும் நமது சுற்றுப்புற சுழலில் உள்ள மாசுக்களால் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்:

1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3. செம்பருத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செம்பருத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6. வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

7. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8. மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

9. செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊர வைத்து குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தலாகி விடும்.

10. மருதாணிஇலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் (2 அல்லது 3 நாட்கள்) ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.

அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

பொதுவான குறிப்புகள் ....!

11. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

12. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது,

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

13. மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.

14. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

15. பெண்களுக்கு மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

16. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

17. அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு....!

18. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

19. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

20. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும்.

21. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

22. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது,

23. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.

24. கொள்ளு பயறு அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.

25. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.

26. பீட்ருட்டை உணவில் அதிகம் சேர்த்தல் இரத்த போக்கினால் ஏற்படும் இழப்பு சமன் செய்யப்படும்.

27. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்.

28. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.

29. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!

கர்ப்பக் கால கவனிப்பு...!

30. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

31. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

32. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

33. கர்ப்பிணிகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

34. கர்ப்பக் காலத்தில் மற்றும் பிரசவ காலத்துக்குப் பின்னும் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் நடைபயிற்சி மிக நன்று.

35. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

36. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

37. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

38. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமி மற்றும் பரம்பரை நிறம்.

39. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

40. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

41. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

42. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளை வாதத்தைக் கூட கொண்டு வரக்கூடும்.

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க....!

43. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.

44. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.

45. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

46. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

47. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து….!

48. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

49. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.உணவே மருந்து.

எல்லா வகை பழங்களையும் சாறு எடுத்து அருந்துவது உடலுக்கு நன்மை தரும்.

50. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

திங்கள், 23 நவம்பர், 2015

Useful Juices at Break Fast - காலை உணவுடன் அருந்த பழ மற்றும் காய்கறி சாறுகள் :


காலை உணவுடன் சேர்த்து அருந்த வேண்டிய பழ மற்றும் காய்கறி சாறுகள் :

உடல் ஆரோக்கியத்துக்கு அதிகமாகப் பலனளிக்கும் அதேநேரம், உடம்பை எந்த வியாதியும் நெருங்காமல் தடுக்கும் பணியையும் பழச்சாறுகள் செய்கின்றன. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறையை உடனே சரிசெய்ய பழச்சாறு பருகுவதே சிறந்த வழி.

கேரட் சாறு :

கேரட் சாறு எடுத்து அருத்தும் போது கண்பார்வை குறைபாடு, நீரிழிவு வியாதி, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் மூட்டு வலி, வீக்கம் ஆகிய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பிட்ரூட் சாறு :

பிட்ரூட் சாறு எடுத்து அருத்தும் போது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிலக்குப் பிரச்சினைகள், சிறுநீரக குறைபாடுகள், இதய நோயாளிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

நெல்லிக்காய் சாறு :


நெல்லிக்காய் சாறு குடிப்பதால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். நெல்லிக்காய் ஜூஸ் பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும்

வெள்ளரி சாறு :


வெள்ளரி சாறு உடல் எடையை குறைக்க உதவும், சிறுநீரகக் குறைபாடுகள் மற்றும் மூட்டு வலி, வீக்கம் ஆகிய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

முட்டைக்கோஸ் சாறு :

இந்த சாறு வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் உடல் எடையை குறைக்க உதவும்.

இது தவிர காய்கறி மற்றும் பயறு வகைகளை வேக வைக்க பயன்படுத்திய நீரையும் அருந்தலாம்.

தர்பூசணிப்பழச் சாறு :


கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது சிறுநீரக கல்லடைப்பு, சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு :


அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம். இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு :

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:


தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும்.

திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும்.

ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும்.

குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு :


நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும்.

உடல் களைப்புகள், கை, கால் கணுக்களில் ஏற்படும் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு :


தக்காளிச் சாற்றை காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.


 கறிவேப்பிலை  :

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, தேங்காய் தேவைக்கு, இஞ்சி ஒரு சிறு துண்டு, சிறிது நாட்டு சர்க்கரை, தண்ணீர் தேவைக்கு சேர்த்து  அரைத்து வடிகட்டி பருகவும். சுவை அருமையாக இருக்கும், பெண்களுக்கு மிகவும் சிறந்தது, உடலில் இரும்பு சத்து ஏற்படும், நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல் மற்றும் நடுக்கம் தீரும்.

எல்லா வகையான பழ சாறுகளும் உடலுக்கு நன்மை தருவது தான்.

குறிப்பிட பருவங்களில் ஒரு சில பழங்கள் அதிகம் கிடைக்கும் அந்த பருவ கால பழங்களை சாறாக அருந்தலாம்.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

Curry Leaf - கறிவேப்பிலை

கறிவேப்பிலை இலையின் மருத்துவ மகத்துவம் :





சத்துகள்  :  வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து .

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால்  கிடைக்கும் நன்மைகள். 



கொழுப்புக்கள் கரையும்:

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள  அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான உடல் அமைப்பை பெறலாம்.

இரத்த சோகை:

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பரம்பரையாக வரும் சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய்:

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் :

அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி :

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தொல்லை:

ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு:

நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.  அதிக குடியினால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல பலன் அடையலாம்.

மன சிதைவு

ஒரு பிடி கறிவேப்பிலை சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து வெறும்  வயிற்றில் உட்கொண்டு வந்தால் மன அழுத்தத்தால் ஏற்பட்ட பிதற்றல் குணமாகும்.


மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

Healthy Green Tea - பால் கலக்காத இயற்கை பானம்

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்!

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்.

தினம் ஒரு டீ . 

1. துளசி இலை டீ:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி இருமலுக்கு நல்லது.

2. ஆவாரம்பூ டீ:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும், சர்க்கரை நோய்க்கு  உள்ளவர்களுக்கு சர்க்கரையை சமநிலை படுத்தும்.

3. செம்பருத்திப்பூ டீ:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம். இதயத்தை பாதுகாக்கும்.

4. கொத்தமல்லி டீ:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். பித்தத்தை தணிக்கும் நல்ல செரிமானம் ஆகும். 

5. புதினா இலை டீ:

புதினா இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.

6. கொய்யா இலை டீ:

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், அதிக உடல் எடை உள்ளவர்கள், இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும் பேதிக்கு நல்ல மருந்து. 

7. முருங்கைக் கீரை டீ:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி. உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

குறிப்பு:

டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.



வியாழன், 19 நவம்பர், 2015

Adatoda Vasica Nees - ஆடாதொடை [ஆடாதோடை]

Name : ஆடாதோடை - Adatoda Vasica Nees


Family : குடும்பம் – Acanthaceae


வளரும் தன்மை: ஆடாதோடை நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி.

பயன்தரும் பாகங்கள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.


ஆடாதோடை

மருத்துவப்பயன்கள்:

ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால்  ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை (wheezing) அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும்

இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும்.

ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும்

இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீரில் கலந்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமஅளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

Jasmine - மல்லிகைப் பூ

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர், பல்வேறு மருத்துவ குணம் கொண்டது.

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல்  பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தினால் வாந்தி எடுத்து குடித்த பூச்சி மருந்து வெளியேறும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும். மல்லிகை வாசனை பிடிக்காதவர்கள் முயற்சிக்க வேண்டாம்

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.


குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும். மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.



திங்கள், 16 நவம்பர், 2015

Uses of Licorice - அதிமதுரம் பயன்கள்

அதிமதுரம்    Licorice


அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை இயற்க்கையின் வரம் எனலாம்நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறதுஇவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது. அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.

4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.

5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.

8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.

11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.

13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
16. சுகப் பிரசவத்திற்கு...அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

17. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

18. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

19. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4 அல்லது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

20. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

21. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3 அல்லது 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

22. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .

23. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

24. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

25. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

26. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

27. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2 அல்லது 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

28. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

29. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

30. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.


31. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.