அதிக கொழுப்பு மற்றும் கலோரி நிறைந்த உணவை சாப்பிடும்போது, உடலின் தேவைக்கு அதிகமான கலோரிகள் பயன்படுத்தப்படாமலும் கொழுப்பு உடலில் சேர்வதாலும் உடல் பருமன் என்ற ஒபிஸிட்டி ஏற்படுகிறது.
உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் சிறந்தது உடற்பயிற்சி, அதிலும் நடைபயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும் இது இயற்கையாக உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.
உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் கீழ் கண்ட முறைகளை எதாவது ஒன்றை கடைபிடித்தால் நல்ல பலனை அடையலாம்.....
ஒரு டேபிள்ஸ்பூன் சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
உணவின் போது கவனிக்க வேண்டிய பழக்கங்கள் ......
எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !
உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பழ வகைகள், பச்சை காய்கறிகள் - தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளவற்றை அதிகம் சாப்பிட வேண்டும், இப்படி செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து உடலும் மெலிந்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

- தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலை யை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.
- காலையில் வெறும் வயற்றில் ஒரு கிளாஸ் மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், உடல் இளைக்கும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் கரைத்து விடும்.
- இஞ்சியை சாறு பிழிந்து, தேவையான அளவு தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைத்து. காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், தொப்பை குறைந்து விடும்.
- ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதை வடிகட்டி சாறு எடுத்து வெறும் வயிற்றில் அருந்தவும் இந்த முறையை பத்து நாட்கள் தொடர்ந்து வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
- உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப்
ஒரு டேபிள்ஸ்பூன் சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
உணவின் போது கவனிக்க வேண்டிய பழக்கங்கள் ......
- காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க சரியான வழி அல்ல ஆகவே காலை உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ள வேண்டும். காலை உணவு தான் நமக்கு அன்றைய தினம் முழுவதும் வேலை செய்ய சக்தியை கொடுகிறது.
- இடை இடையே நாம் எடுத்துகொள்ளும் நொறுக்குத் தீனியை தவிர்த்து எதாவது ஒரு பழத் துண்டுகளை ஒரு கப் அல்லது இரண்டு கப் சாப்பிட்டு வந்தால் போதும் பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.
- உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனம் விரும்பாது.
- முடிந்தால் மதியம் சாப்பாட்டுடன் பாசிப்பருப்புக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம். சுண்டலும் பருப்பும் பசி எடுக்காதபடி தவிர்ப்பதால் அதிகம் சாப்பிட ஆசை இருந்தாலும் இந்த இரு உணவுகளும் சாப்பிட முடியாமல் தடுத்துவிடும் . உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடை குறைவதை உணர முடியும்.
- எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.
எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !
- தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு (பெருஞ்சீரகம்) கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள அதிக படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.
- அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.
- சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- உடலிலுள்ள கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.
- பப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிட உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் சீராகும்.
- மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.
- அன்றாடம் குடிக்கும் தேநீரில் பால் சேர்க்காமல் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.
- வாழைத்தண்டு சாறு மற்றும் அருகம்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.
- வில்வ இலையை காயவைத்து பொடி செய்து வெண்ணீரில் கலந்து அருந்தலாம்.
- ஒரு டம்ளர் மிதமான சுடுநீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, இதனை தினமும் குடிக்கலாம்.
- இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
- சாப்பிட உடன் ஒரு கிளாஸ் சூடான நீரை குடித்து வந்தால் இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.
- உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது
உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பழ வகைகள், பச்சை காய்கறிகள் - தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளவற்றை அதிகம் சாப்பிட வேண்டும், இப்படி செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து உடலும் மெலிந்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக