ஆரோக்கியத்திற்கு
பால் கலக்காத இயற்கை பானம்!
பால்
கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.
இதோ சில ஆலோசனைகள்.
தினம் ஒரு டீ .
1. துளசி
இலை டீ:
சில
துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம்,
ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி இருமலுக்கு நல்லது.
2. ஆவாரம்பூ
டீ:
காம்பு
நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு
வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும், சர்க்கரை நோய்க்கு உள்ளவர்களுக்கு சர்க்கரையை சமநிலை படுத்தும்.
3. செம்பருத்திப்பூ
டீ:
ஒற்றை
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து
வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு,
வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம். இதயத்தை பாதுகாக்கும்.
4. கொத்தமல்லி
டீ:
கொத்தமல்லித்
தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். பித்தத்தை தணிக்கும் நல்ல செரிமானம் ஆகும்.
5. புதினா
இலை டீ:
புதினா
இலைகளை நீரிகில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
6. கொய்யா
இலை டீ:
கொய்யா
இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய்,
வெல்லம் சேர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், அதிக உடல் எடை உள்ளவர்கள், இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும் பேதிக்கு நல்ல மருந்து.
7. முருங்கைக்
கீரை டீ:
முருங்கை
இலை, எலுமிச்சை
இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக்
கீரை டீ ரெடி. உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.
குறிப்பு:
டீ
வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது
தான் மிக நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக