வாழைமரம்
வாழையை நாம் மரம் என்று சொல்வது தவறு அது தாவர வகையை சார்ந்ததாகும், மற்ற மரங்களைப் போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இதில் இல்லை. உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது. வாழை மரத்தின் ஆயுள் அது பூத்து காய்த்த பின் முடிகிறது. தன்னை அழித்துக் கொண்டு நமக்கு பல வகைகளிலும் பயன் கொடுக்கக்கூடிய அற்புதமான தாவரமாகும். நமக்கு அது மரம் என்று அறிமுகமானதால் இதனை மரம் என்றே கூறுவோம்.
வாழைக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. வீடு மற்றும் கோவில் விழாக்களில் வாழைப்பழம், வாழைமரம், வாழைஇலை மற்றும் வாழை நாரினால் கட்டப்பட்ட பூ மாலை கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், ஒரு திருமணத் தம்பதியை வாழ்த்தும் போது வாழையடி வாழையாக வாழ வாழ்த்துவார்கள், என்னெனில் வாழைமரம் ஒன்று நாட்டல் போதும் அருகருகே வாழைக்கன்று தோன்றி தான் குலத்தை தழைக்கச் செய்யும் அதனால் தான் வாழையடி வாழையாக வாழ வாழ்த்துவார்கள்.
வாழைமரம் ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். இதை அறிந்த நம் முன்னோர்கள் வாழைமரத்தை வீட்டின் அருகே வைத்து பராமரித்தார்கள், விஷக்கடி அல்லது தீ விபத்து ஏற்பட்டால் வாழைத்தண்டு சாறு மற்றும் வாழைஇலையால் முதலுதவி செய்து தற்காத்துக் கொண்டார்கள். வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு, பட்டை அனைத்து நமக்கு பயன் தரக்கூடியது. ஒவ்வொன்றாக வரிசையாக பார்க்கலாம்.
வாழை இலையின் மகத்துவம்
இந்திய கலாச்சாரத்தின் படி, மக்கள் வாழை இலையில் உணவருந்துவது வழக்கம். வாழை இலை பச்சையம் நிறைந்தது. நார்ச்சத்து, இரும்பு மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும்போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன, உணவுக்கு கூடுதல் சுவை கிடைக்கிறது.
ஒரு வாழை இலையில் நாம் உணவைப் பரிமாறி உண்ணும் போது உணவு ஆரோக்கியமான உணவாகும். சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது, இலையின் முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் உணவு இழுத்துக் கொண்டு விடும். இதனால் வாழை இலையில் உணவை வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம்.
வாழை இலையின் மருத்துவ பயன்கள்
வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும், இதனை அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை 10 நிமிடம் இளம் சூட்டில் அடுப்பில் வைத்து சூடு பண்ணி, சூடாறிய பின்பு சம அளவு தேன் சேர்த்து, 10 – 15 மி.லி. தினம் 2 – 3 வேளை அருந்த தோல் சுத்தமாகும், ஈறு மற்றும் வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியவை நீங்கும்
வாழைப்பூ
நாம் அரிதாக உணவில் சேர்க்கக்கூடியது வாழைப் பூ, ஆனால் இதை வாரம் இரு முறையாவது கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்
வாழைப்பூ கஷாயம்
வாழைப்பூ 5 அல்லது 6 இதழ்களை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு, அதனுடன்
இஞ்சி 5 கிராம்
பூண்டு பல் 5
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 5 இணுக்கு
ஆகியவற்றை எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும், அடிவயிறு கனம் குறையும், இரத்த ஓட்டம் சீராகும் உடல் வலுவடையும்.
இப்படி வகை வகையாய் நன்மைகளை வாரி வழங்கும் வாழைப் பூவை சமையலில் சேர்த்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.
வாழைத்தண்டு
புனிதமான வாழை மரத்தின் மையத்தில் உள்ள தண்டை சாப்பிடலாம். வாழைத்தண்டில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய தாதுப் பொருட்கள், வைட்டமின் B, C ஆகியவை உள்ளன.
வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்
வாழைத்தண்டை வாரத்துக்கு நான்கு முறையாவது கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து, உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
குறிப்பு
வாழைக்காயின் மருத்துவ குணங்கள்
வாழைப்பூவை கறி சமைத்து,
வாழைக்காயை பொரியலாக்கி,

- வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை ஏற்படாமல், முடி கருப்பாக இருக்கும்.
- தீக்காயம்பட்டவர்களை வாழை இலை மீது படுக்க வைப்பதால், நெருப்பால் ஏற்பட்ட சூட்டின் தாக்கம் குறையும்.
- சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். மேலும் பிளாஸ்டிக் கவரை வைத்து பேக்கிங் செய்வதைவிட, வாழைஇலை எளிதில் மக்கும் தன்மை உள்ளதால் சுற்றுசூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது.
- காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண் மேல் தடவி, வாழைஇலையை அதன் மேல் வைத்து கட்டி வந்தால் குணமாகும்.
- சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையின் மேல் தேன் தடவி, தினமும் சில மணி நேரம் இலை மேல் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
- தோல் தொடர்பான எரிச்சல்கள், அரிப்புகள் மற்றும் சோரியாசிஸ் கொப்பளங்களுக்கு வாழை இலையில் தேங்காய் எண்ணெயை தடவி எரிச்சல் உள்ள இடத்தை அந்த வாழை இலையால் சுற்றி விட்டால், தோல் பிரச்சனை போன இடம் தெரியாது.
- பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் D யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
- வாழைஇலையில் சாப்பிடுவதால் நோய்எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் நமது ஆயுட்காலமும் நீடிக்கும்.
வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும், இதனை அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை 10 நிமிடம் இளம் சூட்டில் அடுப்பில் வைத்து சூடு பண்ணி, சூடாறிய பின்பு சம அளவு தேன் சேர்த்து, 10 – 15 மி.லி. தினம் 2 – 3 வேளை அருந்த தோல் சுத்தமாகும், ஈறு மற்றும் வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியவை நீங்கும்
வாழைப்பூ
நாம் அரிதாக உணவில் சேர்க்கக்கூடியது வாழைப் பூ, ஆனால் இதை வாரம் இரு முறையாவது கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்
- வாழைப்பூ தசைகளை உறுதிப்படுத்தும் மேலும் நரம்புகளை வலுவூட்டும், குறிப்பாக மூளை நரம்புகளில் ஏற்படும் சூட்டை தணித்து மூளைக்கு புத்துணர்வை கொடுக்கும்.
- வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும், இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்த ஓட்டம் சீராகும். இரத்த நாளங்களில் தங்கி இருக்கும் கொழுப்புகளையும் கரைத்து, இரத்தத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் இரும்புச்சத்தை கிடைக்கச் செய்யும்.
- இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும், நோயின் தாக்கம் இருப்பின் சரியாகும்.
- வாழைப்பூவின் துவர்ப்புத் தன்மை இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்றி இன்சுலினை இயற்கையாக சுரக்கச் செய்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும். கணையமும் வலுப்பெறும்.
- வாழைப்பூ வயிற்று புண்களை ஆற்றும். செரிமானத்தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
குறிப்பு
செரிமானக் கோளாறு இருக்கும் போது வாழைப்பூவை தவிர்க்க வேண்டும்.
- வாழைப்பூ இரத்தம் மூலம், உள்மூலம், வெளிமூலம் போன்ற மூல நோய்களை குணப்படுத்தும்.
- வாழைப்பூ மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும் வாய்ப் புண்ணை போக்கும், வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
- உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும்.
- வயிற்றுக்கடுப்புக்கு வாழைப்பூ, சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றுடன் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
- பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல், போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலிக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் தீரும்.
- ஈறு வீக்கம் மற்றும் புண்ணுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.
- வாழைப் பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல், வறட்டு இருமல் தீரும். தாது விருத்தி அடையும்.
- வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலில் வியர்வையை நன்கு வெளியேற்றும் மற்றும் வியர்வை நாற்றத்தைப் போக்கும்.
- பித்தத்தால் ஏற்படும் கை, கால் எரிச்சலுக்கு, வாழைப் பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணையை சேர்த்து வதக்கி, எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் குணமாகும்.
- குழந்தையின்மையால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். ஆண், பெண் இருவரும் வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் தாது விருத்தியாகும் கருப்பையும் வலுப்பெற்று குழந்தை உருவாகும்.
- பருவ வயதில் ஏற்படும் சொப்பன ஸ்கலிதத்தை நிறுத்தச் செய்யும், விந்துவை கெட்டிப்படுத்தும்.
வாழைப்பூ 5 அல்லது 6 இதழ்களை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு, அதனுடன்
இஞ்சி 5 கிராம்
பூண்டு பல் 5
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 5 இணுக்கு
ஆகியவற்றை எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும், அடிவயிறு கனம் குறையும், இரத்த ஓட்டம் சீராகும் உடல் வலுவடையும்.
வாழைப்பூவை சூப் செய்து வாரம் ஒரு முறையாவது அருந்தலாம்.
இப்படி வகை வகையாய் நன்மைகளை வாரி வழங்கும் வாழைப் பூவை சமையலில் சேர்த்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.
வாழைத்தண்டு
புனிதமான வாழை மரத்தின் மையத்தில் உள்ள தண்டை சாப்பிடலாம். வாழைத்தண்டில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய தாதுப் பொருட்கள், வைட்டமின் B, C ஆகியவை உள்ளன.
வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்
வாழைத்தண்டை வாரத்துக்கு நான்கு முறையாவது கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து, உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
- வாழைத்தண்டு உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றும்.
- வாழைத்தண்டை ஜுஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறுகள் நீங்கும், மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை சீராக்கும். சிறுநீர் தாராளமாக பிரியும்.
- வாழைத்தண்டை ஜூஸ் அல்லது சூப் செய்து குடித்தால், குடலில் சிக்கிய மணல் கற்கள் வெளியேறும்.
- சிறுநீரக கற்களை போக்கும், கற்கள் வந்தப்பின் ஏற்படும் வலியை அனுபவிப்பதை விட, நோய் வரும்முன் காப்பது சிறந்தது அவ்வப்போது வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுப்பதோடு அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.
- மலச்சிக்கலைப் போக்கும்.
- உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வாழைத் தண்டு சூப்பை மிளகு, சீரகத்தூளுடன் உப்பை குறைவாக சேர்த்து அருந்தலாம். உணவில் உப்பு சேர்க்காமல் வாழைத்தண்டை சாப்பிடுவது நல்லது.
- நரம்புச் சோர்வை நீக்கும்.
- உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம்.
- வாழைத்தண்டுச் சாற்றை கொதிக்க வைத்து ஒன்று அல்லது இரண்டு அவின்சு (15ml or 30ml) வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், தொடர் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும்.
- பாம்பு கடி மற்றும் விஷக்கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
- விஷக்கடி பாதிப்பு உள்ளவர்கள் வாழைத் தண்டு சாறு எடுத்து குடித்தால் விஷ முறிவு உண்டாகும்.
- மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறு மிகுந்த பயனளிக்கும்.
குறிப்பு
வாழைத்தண்டு சாறை கொதிக்க வைக்காமல் அருந்துவது தவறு.
வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டு – 4 அங்குலம்
வெள்ளைப் பூண்டு – 3 இதழ்
சின்ன வெங்காயம் – 4
சீரகம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு
ஆகியவற்றை எடுத்து இடித்து சூப் செய்து அருந்தினால்.
வெள்ளைப் பூண்டு – 3 இதழ்
சின்ன வெங்காயம் – 4
சீரகம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு
ஆகியவற்றை எடுத்து இடித்து சூப் செய்து அருந்தினால்.
- சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும்.
- தேவையற்ற உப்பு, கொழுப்புகள் கரையும்.
- கண் பார்வை நரம்புகளில் தேங்கி நிற்கும் உப்புப் படிவங்கள் நீக்கிப் பார்வையை தெளிவடையச் செய்யும்.
- நரம்பு மண்டலத்தைத் சுறுசுறுப்பு அடையச் செய்யும்.
- பித்தத்தை குறைக்கும்.
- மாதம் ஒருமுறை வாழைத்தண்டு சூப் செய்து அருந்துவது நல்லது.
வாழைக்காயின் மருத்துவ குணங்கள்
- உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம்.
- வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் வாழைக்காய் சிறிதளவு எடுத்துக் கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
- வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம்.
- வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
- வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.
- நீரழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காய் சாப்பிடலாம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.
- வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
- வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
- வாழைக்காய் சாப்பிடுவதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்கும்.
குறிப்பு
- கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய் மற்றும் வாழைப் பழத்தைத் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது அப்போதுதான் தோலில் உள்ள சத்துக்கள் உடலில் சேரும்.
- வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.
- வாழைக்காய் வறுவல் மற்றும் வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும் என்னெனில் வயிறு மந்தமாகிவிடும்.
- செரிமானக் கோளாறு, உள்ளவர்கள் மூட்டு வலி இருப்பவர்கள் உடல் பருமனானவர்கள், வாயுத்தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவோடு சாப்பிட வேண்டும், தவிர்ப்பது நலம்.
இலை மற்றும் தண்டினை இந்தியாவின் சில பகுதிகளில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துகிறார்கள்.
வாழை நாரிலிருந்து கயிறுகள், விரிப்புகள், கடினமான ஃபான்ட் பேப்பர்கள் மற்றும் காகிதக் கூழ் அகியவை தயாரிக்கப்படுகின்றன.
வாழைப்பூவை கறி சமைத்து,
வாழைக்காயை பொரியலாக்கி,
வாழைத்தண்டை கூட்டு வைத்து,
வாழைப்பழம் பரிமாறி,
வாழை இலையில் விருந்துண்போம்.
வாழைநாரில் மலர்களை தொடுத்து வண்ணமலர் சூட்டிடுவோம், வாழைச்சருகை தொன்னையாக்கி வெண்ணெய்,நெய் வைத்திடுவோம். வாழை மட்டை சாறெடுத்து வெந்தபுண் ஆற்றிடுவோம் வாழை வைப்போம்! வாழ வைப்போம்!
வளமாக வாழ்ந்திடுவோம்.
வளமாக வாழ்ந்திடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக