வியாழன், 17 டிசம்பர், 2015

Guava Health Benefits - கொய்யாவின் மருத்துவ குணங்கள்

இந்தியாவின் நான்காவது சிறந்த பழம் எது தெரியுமா ? 

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் தாவரங்கள், இவைகள் ஏதாவது ஒருவகையில் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, அதாவது உணவாகவும், மருந்தாகவும், இருப்பிடங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. ஆதிகால மனிதனுக்கு உணவாக கிடைத்தது பழங்கள் மட்டுமே. பழங்கள் சாப்பிடுவதால் நம் உடலில் உருவாகும் அனைத்து நோய்களுக்கும் தீர்வு கிடைப்பதுடன் நம் உடலுக்கு தேவையான உயிர்சத்துக்களும் கிடைத்து விடும்.

இயற்கை நமக்கு அளித்த பழங்களில், விலை மலிவாகவும் நம் உடலுக்கு தேவையான அனைத்து நோய் எதிர்ப்புச் சக்தியையும், பல்வேறு மருத்துவக் குணத்தையும் தன்னகத்தே குவித்து வைத்துள்ள பழம் கொய்யாப் பழம் ஆகும்.  இந்தியாவின் நான்காவது சிறந்த பழமாக கருதப்படும் கொய்யாப்பழத்தின் மணம் மற்றும் சுவை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.

கோடைக்காலங்களில் அபரிமிதமாக விளையும் கொய்யாப்பழம் தற்போது உயர் தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் கிடைக்கிறது. இது வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இதன் கிளைகள் வழுவழுவென்றும், இலைகள் தடித்தும் காணப்படும்.

கொய்யாப்பழம் 







கொய்யாவில் பலவகைகள் உள்ளன, அவற்றில் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும். தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப் பகுதி வெள்ளை, சிவப்பு மற்றும் ரோஸ் நிறத்தில் உள்ளன. ஆனால், மருத்துவப் பயன் ஒன்றுதான்.

இதன் பயன் தரும் பாகங்கள் : இலை, வேர், காய் மற்றும் பழம்.

வேறு பெயர்கள் : ஜாம்பலா, கோவா, பலாம்பர்

சத்துகள்

கொய்யாபழத்தில் வைட்டமின் B மற்றும் C ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் கொட்டிக் கிடக்கின்றன.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஈரப்பதம் - 81.7 %  , புரதம் - 0.9 %. , கொழுப்பு - 0.3 %. ,

மணிச்சத்து - 0.7%. , நார்ச்சத்து - 5.2 % , மாவுச்சத்து - 11.2% ,

கலோரி அளவு - 51

கால்சியம் - 10 மி.கி. ,  பாஸ்பரஸ் – 28 மி.கி. ,

இரும்புச்சத்து - 0.27 மி.கி. ,  வைட்டமின் ’சி’ - 210 மி.கி.,

வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் - சிறிதளவு.

கொய்யாப் பழங்களிலும், விதையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

கொய்யாப் பழம் மற்றும் காய் [காய்க்கும் பழத்திற்கும் இடையே உள்ள நிலை] நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

கொய்யா என்று குறிப்பிடுவது கொய்யாப்பழம் மற்றும் காயை. 

கொய்யா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 

பற்களை பாதுகாக்கும் கொய்யா

பற்களில் இரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவற்றை சரி செய்து பற்களையும், ஈறுகளையும் வலுவாக்கும்.

வாய்ப்புண்ணை குணமாக்கும்.

கொய்யா இலையை வாயில் இட்டு மென்று, அப்படியே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், ஆடும் பற்கள் கெட்டிப்படும், பற்சொத்தை நீங்கும், பல் வலி குணமாகும் பல்லில் உள்ள கறைகள் நீங்கி பற்கள் வெண்ணிறமாகும் .

இலையை காய்ச்சி கொப்பளித்தால் ஈறு வீக்கம் குணக்கும்.

தோல் நோய்களை குணப்படுத்தும் கொய்யா

முகத்தில் ஏற்படும்  தோல் வறட்சியை நீக்கி பொலிவை தரும்.

சொறி, சிரங்கு  இருப்பவர்கள் கொய்யா சாப்பிட்டு குணப்படுத்தி கொள்ளலாம்.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்

வயிற்று நோய்களுக்கு நிவாரணம் தரும் கொய்யா 

இன்றைய உணவுகளில் இரசாயன கலப்பு அதிகம் இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் உள்ளுறுப்புகளாகிய செரிமான உறுப்புகள் [வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல்] பலப்படும்.

மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தினம் சாப்பிட்டு பயன் பெறலாம். உடலில் உள்ள கழிவு வெளியேறாமல் இருப்பதே பல நோய்கள் நம்மை தாக்க காரணமாக அமைகிறது. .

ஆரம்ப நிலையில் உள்ள மூல நோய்க்கு கொய்யப் பழமே சிறந்த மருந்து.

கொய்யாக்காய் வயிற்றுப் புண்களையும், வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப் போக்கையும் குணமாக்கும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது.

ஒரு கைப்பிடி கொய்யா இலையை ஒரு மிளகாயுடன் இரும்பு கடாயில் லேசாக வதக்கி ஒன்றுக்கு கால் பங்காக (ஒரு லிட்டர் தண்ணீர் என்றால் கால் லிட்டர் ஆகும் வரை) காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு வீதம் குடிக்க காலராவால் ஏற்படும் வாந்தி, பேதி மற்றும் வயிற்று மந்தம், குமட்டல், நாவறட்சி அடங்கும்.

கொய்யா இலையை தண்ணீரில் காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு குடிக்க வாந்தி பேதி குணமாகும். 

கொய்யாக் கொழுந்து இலையை மென்று உண்ண உணவு செரியாமை, வயிறு மந்தம், குடல் வாயு தீரும்.

இரண்டு கைப்பிடி கொய்யா இலையை இரும்பு கடாயில் லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளுக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும்.

அல்லது

கொய்யா மரத்தின் மெல்லிய வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுதும் மூடி ஊறவைத்து, இந்த நீரைக் கொண்டு மூலத்தைக் கழுவி வந்தாலும் மூலம் சுருங்கி விடும்.


  • குறிப்பு : இரண்டு முறைகளிலும் மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும்.


இரத்தச் சுத்திகரிப்பில் கொய்யா


இரத்தச் சோகை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் 48 நாட்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள இரும்புச் சத்து இரத்தச் சோகை குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுப்பதுடன் இரத்தத்தை சுத்திகரித்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும்.

காயம் ஏற்பட்டு அதிக இரத்தம் வெளியேறும் போது கொய்யா இலையை அரைத்து பூசினால் இரத்தம் நிற்கும் காயமும் விரைவில் குணமாகும்.

இரத்த அழுத்தம்

கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

நீரழிவு நோயை தடுக்கும் கொய்யா 

கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

கொய்யா இலை டீயின் மகிமை

கொய்யா மரத்தின் தளிர் இலைகளை ஒரு கைப்பிடி பறித்து நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேநீர் போல் அருந்தி வந்தால். 

உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறையும், இரத்தத்தில் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தும்.

இதயப் படபடப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.

வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வயிற்றுப் புண் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையாகும்.

இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்.

பாக்டீரியா காரணமாக அல்லது காரணம் தெரியாமல் ஏற்படும் வயிற்றுப் போக்கு குணமாகும்.

சிறுநீர் நன்கு பிரியும் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

அல்சர் நோயை மற்றும் குடல் புண் குணமாகும்.

இருமல், தொண்டைப் புண் குணமாகும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

  • குறிப்பு : கொய்யா இலை டீக்கு இனிப்பு தேவை என்றால் பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.

புற்றுநோய்யைத் தடுக்கும் கொய்யா 

வியாதிகள் பல இருந்தாலும் உலகமே நடுங்கும் வியாதியான புற்றுநோயை கூட தடுக்கும் சக்தி கொய்யாவுக்கு உண்டு. புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொய்யாவில் நிறைந்து இருகின்றன.

புற்றுநோய் இருபவர்கள் கொய்யாவை தினம் சாப்பிட்டு வந்தால் நோயின் தன்மை குறையும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொய்யா

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் C சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது

குழந்தைகளுக்கு அளவோடு கொய்யா கொடுத்து வந்தால் எலும்புகள் பலப்படும் உடல் வளர்ச்சி அடைவதோடு பற்களும் பலமடையும்.

மூளைக்கு சக்தி கொடுக்கும் தன்மை கொய்யாவில் இருப்பதால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

தோல் புண்களால் அவதிப்படும் குழந்தைகள் கொய்யா சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.

கொய்யா வேர்ப்பட்டை நன்கு சுத்தம் செய்து சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீரிலிட்டு நன்றாக கொதிக்க வைத்து கசாயமாக்கி ஆறிய பின் குழந்தைகளுக்கு (5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்) கொடுக்க வயிற்றுப் போக்கினை குணப்படுத்தும்.

அல்லது

கொய்யா மரப்பட்டையை நன்கு சுத்தம் செய்து சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீரிலிட்டு நன்றாக கொதிக்க வைத்து கசாயமாக்கி ஆறியபின் குழந்தைகளுக்கு (5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்) கொடுக்க வயிற்றுப் போக்கு, இழுப்பு மற்றும் வலிப்பு போன்ற வியாதிகள் குணமாகும்.

நரம்புகளை பலப்படுத்தும் கொய்யா

கொய்யாவை தினமும் உணவோடு உண்ண நரம்புகளைப்  பலப்படுத்தும், நரம்புத் தளர்ச்சி குறையும், வலிப்பு நோய்க்கு சிறந்த மருந்து கொய்யா.

கொய்யாவின் இதர பயன்கள்

மழைக் காலங்களில் எளிதில் தொற்று நோய்கள் ஏற்படும் அதனால் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகளை இரத்தத்தில் இருந்து அழிக்கும்.

கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும்

உடலின் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியடைச் செய்யும். 


பசியே எடுக்காதவர்கள் நன்கு பழுத்த கொய்யாப் பழம் ஒன்று சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

அடிக்கடி விக்கல் வந்து சிரமப்படுபவர்கள் குணம் பெறலாம்.

ஆண்களின் விந்தணுகளை பெருக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு . 

கொய்யாமரப் பட்டையை கசாயமாக்கி குடித்தால் காய்ச்சல் நீங்கும்.

  • கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதே போன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் அளவோடு சாப்பிடவும் (சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்).

கொய்யா பழத்தை முழுப்பழமாக, ஜாமாக, ஜெல்லியாக, ஐஸ் கிரீம்மாக, சர்பத்தாக எந்த முறையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

கொய்யா ஜாம்

கொய்யா ஜாம் பொதுவாகக் கடைகளில் கிடைக்காத ஒன்று.

செய் முறை :

  • கொய்யாப் பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கொய்யாவின் சம அளவுக்கு சர்க்கரை எடுத்துக் கொண்டு பின் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து கைப்படாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். விழுதுப் பதம் வந்தவுடன் கீழே இறக்கி ஒரு சிட்டிகை சிட்ரிக் ஆசிட் அல்லது எலுமிச்சைப் பழம் , மஞ்சள் ஃபுட் கலர் சேர்க்கவும்.  (கலர் தவிர்க்க நினைபவர்கள் மஞ்சள்தூள் சேர்க்கலாம்) கொய்யா ஜாம் ரெடி. 

கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கலாம்.

நோய்களால் அவதிப்படுபவர்களும் மற்றும் நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் தினமும் ஒரு கொய்யாப்பழம் உண்டு நோயின்றி வாழலாம்

கொய்யாப்பழத்தை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும். எந்த பழமாக இருந்தாலும் கழுவி உண்பது நன்று.

பழங்களின் சுவை அதில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களை பொறுத்தே அமைகிறது. பொதுவாக அமிலத்தன்மை அதிகம் இருந்தால் புளிப்பும், சர்க்கரை சத்து அதிகம் இருந்தால் இனிப்பும், அமிலமும், சர்க்கரையும் சம அளவில் இருந்தால் புளிப்பும், இனிப்பும் கலந்து இருக்கும்.

மருத்துவத் தன்மை கொண்ட நமது பாரம்பரிய உணவை மறந்ததால் நாம் பல்வேறு நோய்க்கு ஆளாகிறோம் அதனால் இயற்கை முறையில் கிடைக்ககூடிய உணவை உண்டு நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

எப்போதும் நாம் இயற்கையை சார்ந்து வாழ்ந்தால் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

வாழ்க வளமுடன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக