புதன், 23 டிசம்பர், 2015

Pineapple and its Benefits - அன்னாச்சிப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

அன்னாச்சிப்பழம் பூவா பழமா ?

இறைவன் நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் இயற்கை வளம். பழங்காலத்திலிருந்து இன்றுவரை, மனிதன் இயற்கை வளங்களையே சார்ந்திருக்கிறான். இயற்கையின் முக்கியத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள், இயற்கையை "இயற்கை அன்னை" என்று தெய்வமாக வழிப்பட்டனர்.

இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமானது பழங்கள். ஒவ்வொன்றிலும் பல்வேறு சத்துக்கள் இருப்பதுடன் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு பல நன்மைகளை செய்கிறது, இவற்றில் ஒன்று தான் இயற்கை அன்னையின் அதிசய படைப்பு அன்னாச்சிப்பழம்.

ஆம், அன்னாச்சி செடி பூக்கிறதே தவிர, பழம் தருவதில்லை, பல பூக்கள் ஒன்றாக சேர்த்து இறுக்கப்பட்ட ஒரு பூச்செண்டு தான் அன்னாச்சிப் பழம் என்று அழைக்கப்படுகிறது அதன் தலை பாகத்தில் சிறு இலைக்கொத்து காணப்படும்.






பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படும் அன்னாச்சியில் மாங்கனீஸ் உள்ளிட்ட பல ஊட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டு பயனடையலாமே

சத்துகள்


அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களான வைட்டமின் உயிர்சத்துகள், மாங்கனீஸ், புரதச்சத்து, இரும்பு சத்துகள் ஆகியவை அடங்கியுள்ளது, 100 கிராம் அன்னாச்சிப் பழத்தில் உள்ள கலோரிகள் 5௦%

வைட்டமின் C 105%     மங்கனீஸ் 77%     காப்பர் 20% வைட்டமின் B6 11%      வைட்டமின் B1 11%     நார்ச்சத்து 9%     மற்றும் பிற சத்துகளும்,

நீர்ச்சத்து 85 % சர்க்கரை 13 % புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05  அளவிலும் சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துகளும் நிறைந்துள்ளன.

அன்னாச்சிப்பழம் உடலுக்குப் பலத்தை தருவதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.

இரத்தச்சம்பந்தமான தீர்வு தரும் அன்னாச்சிப் பழம்

அன்னாச்சிப்பழம் உடலில் போதுமான இரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தை விருத்தி செய்யும்,

இரத்தம் உறைதலுக்கு அன்னாச்சிப் பழத்தில் உள்ள மங்கனீஸ் சத்து பெரிதும் உதவுகிறது.

உள் உறுப்புகளை பலப்படுத்தும் 

அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம், அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதயத்தை பலப்படுத்தும் தன்மை உள்ளதால் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும்.

அன்னாச்சிப் பழம் ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தி ஜீரணக் கோளாறு ஏற்படாமல் செய்வதுடன் ஜீரணசக்தியை அதிகரிக்கும்.

வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணம் அடையும்.

அன்னாச்சிப் பழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.

அன்னாச்சிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.

அன்னாசிப் பழச்சாறில் குடல் செயல்களை ஊக்குவிக்கும் தன்மை உள்ளதால் எளிதில் கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமடையும்.

பித்தத்தை நீக்கும் அன்னாச்சிப் பழம் 

பித்தக் கோளாறுகளை அன்னாச்சிப்பழம் விரைந்து குணமாக்குகிறது.

பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் ஆகியவற்றை நீக்க சிறந்த மருந்து அன்னாச்சிப் பழமாகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெய்யிலில் தூசிப்படாமல் நன்றாக காயவைத்து (வற்றல் பதமாக) கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான கோளாறுகள் நீங்கும்.

கொழுப்பைக் கரைக்கும் 

அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பு கரைந்து தொப்பை குறையும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்று அல்லது அரை (பழத்தின் அளவுக்கு ஏற்ப) அன்னாச்சிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு பழம் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் சேர்த்து நன்றாகக் கிளறி கொதிக்க வைத்து இறக்கி வைத்துவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அன்னாச்சிப்பழத்தை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு மருந்தாகும் அன்னாச்சிப் பழம் 

குழந்தைகளுக்கு அன்னாச்சிப் பழம் அல்லது அன்னாச்சிப் பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும், இதில் புரதம் தாராளமாக இருப்பதால் எலும்பு வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி ஏற்படும்.

அன்னாசி இலைச்சாறு தேன் கலந்து 5 m.l.. குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்பூச்சிகள் அழியும். பெரியவர் 15 m.l. அருந்தலாம்.

ஒரு ஸ்பூன் இலைச் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுக்க, தொடர் விக்கல், இழுப்பு நோய் தீரும்.

அன்னாச்சிப் பழத்தின் பொதுவான மருத்துவ பயன்கள்

உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது.

சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

உடல் நலத்திற்குத் தேவையான உப்பு அன்னாச்சிப் பழத்தில் கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பை உடலுக்குப் பெற ஒரு கப் அன்னாச்சிப்பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

மங்கனீஸ் நம் உடலில் எலும்புகளை உருவாக்கவும், எலும்பு இணைப்பு திசுக்கள், செக்ஸ் ஹார்மோன் மற்றும் தைராய்டு சுரப்பி போன்றவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவதுடன், இரத்தம் உறைதலுக்கும், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தவதிலும் முக்கிய பங்குவகிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்குகிறது, நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை உணவிலிருந்து பிரிக்கிறது.

அன்னாச்சிப் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்கள் உண்டால் உடல் ஆரோக்கியம், பளபளப்பு மற்றும் உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடையது, கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.

அன்னாச்சிப் பழச்சாற்றின் பயன்கள்

அன்னச்சிப்பழச்சாற்றை சிறிது நேரம் தொண்டையில் படும்படி வைத்திருந்து விழுங்கி வர தொண்டைப்புண் தொண்டைவலி தீரும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.

அன்னச்சிப்பழச்சாற்றை ஒரு நாள் நான்கு வேலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

அன்னாசிப்பழச்சாற்றுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, தலைவலி, கண் நோய்கள், காது நோய்கள், பல் நோய்கள், தொண்டை நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட  

உடல் பலம் கூடும், உடலில் வீக்கம் ஏற்படாது, உடல் பளபளப்பாகும், உடலுக்கு அழகைத்தரும், முகம் பொலிவு பெறும், கண் ஒளி பெறும்.

உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது சோர்வின்றி செயல்பட வைக்கிறது.

அன்னாசிப் பழத்தின் மறுபக்கம் 

இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.


இனிப்பு மற்றும் சுவை காரணமாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் அன்னாச்சிப் பழத்தில் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தக்கூடிய தன்மை இருந்தாலும் இப்பழத்தில் இயற்கையில் சர்க்கரை சத்து இருப்பதால் நீரழிவு நோயாளிகள் இப்பழத்தை அதிகம் உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். அதனால் இப்பழத்தை தவிப்பது நல்லது.

நீங்கள் அன்டிபையடிக்ஸ் (Aantibiotics) மற்றும் வலிப்பு நோய்க்கான மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.

பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.

அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் கரை ஏற்படும் பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகள் கொண்டவர்கள் அன்னாசி பழத்தை
அதிகம் உட்கொள்ளவேண்டாம்.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனை போக்க அன்னாசிப் பழத் துண்டுகளை உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும்,

அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

முடக்குவாதம் மற்றும் கீழ்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி (அமிலத்தன்மை) உள்ளது அதனால் சிலருக்கு இதை உட்கொண்ட கொண்டவுடன் வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும் சிலருக்கு வயிற்று வலி கூட ஏற்படலாம்.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும், 

என்ற பழமொழியை மனதில் கொண்டு 
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பலத்தை தரக்கூடிய அன்னாச்சிப் பழத்தை அளவோடு சாப்பிட்டு பயனடையலாம்.


திகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய, இயற்கையின் வளங்கள் தன்னை நகரமயமாவதற்கும் தொழில்மயமாவதற்கும் அர்ப்பணிக்கிறது அதனால் நீர் இல்லாத ஆற்றுப்படுகை, மாசடைந்தக் காற்று மற்றும் வன உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இயற்கை வளங்கள் தன்னை தானே அழித்துக் கொள்கிறது, இயற்கை அன்னையை இந்த அழிவிலிருந்து காப்பாற்ற நம்மால் மட்டுமே முடியும், முடிந்த வரை நம் வீட்டை சுற்றி மரங்களும் செடிகளும் வளர்த்து இயற்கை அன்னையை காப்போம்.

இயற்கை அன்னையை காப்போம்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக