வாழைப்பழம் வகைகள்
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் பொதுவான மருத்துவ குணங்களைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம், இந்த பதிவில் வாழைப்பழத்தின் வகைகள் மற்றும் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி பார்க்கலாம். வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் இருந்தாலும் சத்தில் வேறுபாடு கிடையாது, ஆனால் மருத்துவ குணத்தில் வேறுபாடு உள்ளது. எல்லா வகை பழங்களிலும் மனித உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் உதவி செய்கிறது.
வாழைப்பழத்தின் வகைகள் பூவன் வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பேயன் வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம் போன்ற வகைகள் குறிப்பிடத்தக்கவை.
பூவன் வாழைப்பழம்

பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் பழம்.
ஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக்கொண்டவர்கள, குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோயாளர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
பச்சை வாழைப் பழம்
பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள். இப்பழம் அதிக குளிர்ச்சி தரும் சுபாவம் கொண்டது.
மொந்தன் வாழைப்பழம்
மொந்தன் வாழைப்பழத்தை பொந்தன் வாழை என்றும் கூறுவார். அளவோடு இப்பழத்தை சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று நான்கென்று சாப்பிட்டால் பசியை மந்தப்படுத்தும்.
ரஸ்தாளி வாழைப்பழம்
ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. ஊட்டச்சத்து நிரம்பியது.
நேந்திர வாழைப்பழம்
நேந்திரப்பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்ட இப்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தை விருத்தி அடைய செய்யும்.
தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பேயன் வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதிக உடல் குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது நுரையீரலில் கோழையை கட்ட வைத்து நுரையீரல் கோளாறுகளுக்கு தள்ளிவிடும்.
மலை வாழைப்பழம்
நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம் சற்று விலை அதிகமானதாகும் சாமானிய மக்களுக்கு எட்டாத பழமாகும். வாத நோய்க்காரர்களை தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம். சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும். மலைவாழைப்பழத்தில் சர்க்கரை சத்து கொஞ்சம் குறைவாக இருக்கும்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது. சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.
நவரை வாழைப்பழம்
அதிகமாக எவரும் விரும்பாத பழம் இது. உடல் ஆரோக்கயத்திற்கு உதவாது. உடலில் ஏதாவது நோய் இருந்தால் அந்த நோய் எளிதில் குணமாகாது.
நோயின்றி இருப்பவர்கள் அளவோடு சாப்பிடலாம். மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது
சொறி, சிரங்கு உள்ளவர்கள், வாத நோய்க்காரர்களும் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிட்டால் பிரச்சனை அதிகமாகும்.
நிறைய சாப்பிட்டால் சோம்பலை உருவாக்கும், பசியை மந்தப்படுத்தி விடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
கற்பூர வாழைப்பழம்
கற்பூர ஒளி போல், இப்பழத்தை சாப்பிட்டதும், தேகத்தில் உடனே ஒருவித தெம்பு ஏற்படுவதால் தான் அதற்கு இப்பெயர் ஏற்பட்டது போலும். இனிப்புச் சுவையுடன், ருசியாகவும் சிறிய அளவிலும் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் உகந்த பழமாகும்.
கருவாழைப் பழம்
மலைப் பிரதேசங்களில் அதிகமாய் விளையும் பழம் எவருக்கும் கெடுதல் தராது உடலுக்கு ஊட்டத்தைத் தரும் நல்ல பழம் இது.
இக்கனி தற்பொழுது எங்கும் கிடைப்பதில்லை. அதிகமாய் விற்பனைக்கு வராத பழம்
வாத நோய்க்காரர்களுக்கு ஆகாது
குழந்தைகள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்பு கொண்டது. இப்பழம் கிடைத்தால் வாரத்திற்கு மும்முறை கொடுங்கள்.
அடுக்கு வாழைப்பழம்
நவரைப் பழத்திற்குள்ள குணங்கள் அனைத்தும் இதற்கும் உண்டு. எந்த நோயும் இல்லாதவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் எந்த கெடுதலும் செய்யாது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவுதான். எனவே நோயுள்ளவர்கள். இப்பழத்தை தொடாமல் இருப்பது நல்லது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
தினமும் ஏதாவது ஒரு வாழைப் பழத்தை உணவிற்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.
வாழைப்பழத்தில் பால்வினை நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வாழைப்பழத்தின் முழுப்பயனையும் பெற வேண்டுமானால் அதன் மேல் லேசாக கரும்புள்ளிகள் விழுந்தபின் வாங்கி சாப்பிடுவது நல்லது.
வாழைபழத்தின் பொதுவான மருத்துவ பலன்களைப் பற்றி தெரிந்தகொள்ள இந்த linkயை கிளிக் பண்ணவும்
- ஒவ்வொரு நாளும் பூவன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால் செரிமான சக்தி அதிகரிப்பதோடு, உண்ணும் உணவை முழுச்சத்தாகவும் மாறும்.
- தினமும் உணவிற்குப் பின் பூவன் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது.
- உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக் கூடியது. இரத்த விருத்தியைத் தரும்.
- தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது.
ஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக்கொண்டவர்கள, குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோயாளர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
பச்சை வாழைப் பழம்
பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள். இப்பழம் அதிக குளிர்ச்சி தரும் சுபாவம் கொண்டது.
- பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும் கோடைக் காலங்களில் தாராளமாக உண்ணலாம், உடல் உஷ்ணக்காரர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
- பித்தத்தையும், மலச்சிக்கலையும் நீக்கும் குணம் கொண்டது.
- குடல் புண்ணை ஆற்றும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
குறிப்பு
- வாத நோயாளிகள், காச நோய், ஆஸ்துமா நோய்க்காரர்கள் தவிர்க்க வேண்டும், குறைந்த அளவு சாப்பிட்டாலும் நோயை அதிகப்படுத்தும்.
- சிலருக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். அவர்கள் அதே சுவையுடன் இருக்கும் பூவன் பழத்தைச் சாப்பிடலாம்.
மொந்தன் வாழைப்பழம்
மொந்தன் வாழைப்பழத்தை பொந்தன் வாழை என்றும் கூறுவார். அளவோடு இப்பழத்தை சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று நான்கென்று சாப்பிட்டால் பசியை மந்தப்படுத்தும்.
- தினம் ஒன்றோ இரண்டோ உணவுக்கு பின் சாப்பிட்டால் உஷ்ணத்தை தணிக்கும்.
- காமாலை நோயைக் குணப்படுத்த சிறந்த பழம்.
- வாந்தியை நிறுத்தும்.
ரஸ்தாளி வாழைப்பழம்
ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. ஊட்டச்சத்து நிரம்பியது.
- தினமும் உண்டு வந்தால் இருதயம் பலப்படும்.
- வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
- ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
- ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.
குறிப்பு
- இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப்பது நல்லது. இதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று ஆகிவிடும்.
- இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது.
- பலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
- இப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாவுச்சத்து இருப்பதால் நீரழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
நேந்திர வாழைப்பழம்
நேந்திரப்பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்ட இப்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தை விருத்தி அடைய செய்யும்.
- நேந்திரம் பழம் சாப்பிடுவதால் மூளையின் செல்கள் பலப்பட்டு நினைவு ஆற்றல் பெருகும், மாணவர்களுக்கு பரீட்சை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. பரீட்சை அன்று சாப்பிடாமல் செல்லும் குழந்தைகள் நேந்திர வாழைப்பழத்தை சாப்பிட்டு சென்றால் பசியும் அடங்கும், மூளையும் சுறுசுறுப்புடன் இருக்கும்.
- காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தில் ஒன்றும் முட்டை ஒன்றும் உண்டுவர, காசநோய் விலகி உடல் புஷ்டிக்கும்.
- ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நன்றாகப் பழுத்த நேந்திரப் பழத்தை சிறிது உப்பிட்டு வேகவைத்து நன்றாக பிசைந்து சாப்பிடக் கொடுத்தால் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும்.
- நேந்திர வாழைப்பழம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது. இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும்.
- தொடர் இருமல் இருந்தால் பழுத்த நேந்திரம் பழத்துடன் கால் தேக்கரண்டி மிளகு பொடியை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
- இதயத்தின் வலிமைக்கு நேந்திரம் பழம் மிகவும் சிறந்தது. ஆகவே கிடைக்கும் போது நேந்திரம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் வராமல் பாதுகாக்கலாம், மேலும் இருதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பழமாகும்.
- நேந்திர வாழைப்பழம் உடம்புக்கு குளிர்ச்சியை தருவதோடு அதிக சத்துக்கள் நிரம்பியதாக இருக்கும்.
- உடல் மெலிந்தவர்கள், நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை சிறுசிறு துண்டுகளாக்கி இட்லி வேக வைப்பதுபோல அவித்து இதனுடன் நெய்யை கலந்து 40 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்த உடல் பூஷ்டியாகும்.
- நேந்திர வாழைப்பழம் ஜீரணிக்க நேரமாகும் என்பதால் அளவோடு சாப்பிடவேண்டும்.
- நேந்திரம் சிப்ஸ், ஜாம், வற்றல் ஆகியவை கடைகளில் கிடைக்கும் சாப்பிட சுவையாக இருக்கும் ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும், அதிகம் உண்டால் வயிறு மந்தம் ஏற்படும்.
தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பேயன் வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- அதிக உஷ்ணமான தேகத்தை கொண்டவர்கள் பேயன்பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, உடல் சூடு சமநிலைப்படும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச் சூட்டை தணிக்கும் இயல்பு கொண்டது.
- மலச்சிக்கலை போக்கும்.
- பெரியவர்களுக்கு ஏற்படும் பித்தம் மற்றும் வாத நோய் குணம் அடையும்.
குறிப்பு
அதிக உடல் குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது நுரையீரலில் கோழையை கட்ட வைத்து நுரையீரல் கோளாறுகளுக்கு தள்ளிவிடும்.
மலை வாழைப்பழம்
நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம் சற்று விலை அதிகமானதாகும் சாமானிய மக்களுக்கு எட்டாத பழமாகும். வாத நோய்க்காரர்களை தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம். சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும். மலைவாழைப்பழத்தில் சர்க்கரை சத்து கொஞ்சம் குறைவாக இருக்கும்.
- மலை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் சளித் தொந்தரவுகள் நெருங்காது.
- குழந்தைகளுக்கு 5 மாதத்தில் இருந்து நன்கு மசித்த வாழைப்பழம் கொடுக்கலாம்.
- இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும். இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.
- தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
- பசியினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல ஜீரண சக்திக்கு ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
- ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர அஜீரணக் கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும். பயப்பட வேண்டாம்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது. சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.
நவரை வாழைப்பழம்
அதிகமாக எவரும் விரும்பாத பழம் இது. உடல் ஆரோக்கயத்திற்கு உதவாது. உடலில் ஏதாவது நோய் இருந்தால் அந்த நோய் எளிதில் குணமாகாது.
நோயின்றி இருப்பவர்கள் அளவோடு சாப்பிடலாம். மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது
சொறி, சிரங்கு உள்ளவர்கள், வாத நோய்க்காரர்களும் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிட்டால் பிரச்சனை அதிகமாகும்.
நிறைய சாப்பிட்டால் சோம்பலை உருவாக்கும், பசியை மந்தப்படுத்தி விடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
கற்பூர வாழைப்பழம்
கற்பூர ஒளி போல், இப்பழத்தை சாப்பிட்டதும், தேகத்தில் உடனே ஒருவித தெம்பு ஏற்படுவதால் தான் அதற்கு இப்பெயர் ஏற்பட்டது போலும். இனிப்புச் சுவையுடன், ருசியாகவும் சிறிய அளவிலும் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் உகந்த பழமாகும்.
- கண்ணிற்குக் குளிர்ச்சியைத் தரும்.
- தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது.
- தலைபாரம் நீங்கப் பயன்படும்.
- இளைஞர்களுக்கு சுறுசுறுப்பை தரும் இனிய பழம்
கருவாழைப் பழம்
மலைப் பிரதேசங்களில் அதிகமாய் விளையும் பழம் எவருக்கும் கெடுதல் தராது உடலுக்கு ஊட்டத்தைத் தரும் நல்ல பழம் இது.
இக்கனி தற்பொழுது எங்கும் கிடைப்பதில்லை. அதிகமாய் விற்பனைக்கு வராத பழம்
வாத நோய்க்காரர்களுக்கு ஆகாது
குழந்தைகள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்பு கொண்டது. இப்பழம் கிடைத்தால் வாரத்திற்கு மும்முறை கொடுங்கள்.
அடுக்கு வாழைப்பழம்
நவரைப் பழத்திற்குள்ள குணங்கள் அனைத்தும் இதற்கும் உண்டு. எந்த நோயும் இல்லாதவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் எந்த கெடுதலும் செய்யாது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவுதான். எனவே நோயுள்ளவர்கள். இப்பழத்தை தொடாமல் இருப்பது நல்லது.
- தேகவனப்பை வளப்படுத்தும்.
- மலச்சிக்கலைப் போக்கும்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
தினமும் ஏதாவது ஒரு வாழைப் பழத்தை உணவிற்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.
வாழைப்பழத்தில் பால்வினை நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வாழைப்பழத்தின் முழுப்பயனையும் பெற வேண்டுமானால் அதன் மேல் லேசாக கரும்புள்ளிகள் விழுந்தபின் வாங்கி சாப்பிடுவது நல்லது.
வாழைபழத்தின் பொதுவான மருத்துவ பலன்களைப் பற்றி தெரிந்தகொள்ள இந்த linkயை கிளிக் பண்ணவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக