செவ்வாய், 29 டிசம்பர், 2015

Cinnamon Health Benefits - இலவங்க மரப்பட்டையின் மருத்துவ பயன்கள்

ஆரோக்கியம் கொழிக்கும் இலவங்க மரப்பட்டை

உணவில் வாசனைக்காக சேர்க்கக்கூடிய பொருட்களில் பட்டை என நாம் அழைக்கும் இலவங்கப்பட்டையும் ஒன்று, 
இதன் தாயகம் இலங்கை.  இது உலகின் மிகப் பழமையான வாசனைப் பொருள் ஆகும். இதற்கு மனதைக் கவரும் மணமும், யாவரும் விரும்பும் லேசான இனிப்புச் சுவையும் உண்டு. இதனை லேசாக ஒடித்தாலே மூக்கைத் துளைக்கும் மணத்தை அறிய முடியும்.

பிரியாணி, குருமா போன்ற உணவு வகைகளில் உபயோகிக்கும் இந்த மரப்பட்டையை  சின்னமான் (Cinnamon) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பல பகுதிகளில் விளைகிறது. 
இலவங்கப்பட்டையில் நார்ச்சத்தும் மெக்னீசியம், இரும்பு, மற்றும் கால்சியம் சத்தும் காணப்படுகிறது. நாம் நேரடியாக உண்ணும் பொழுது அதிசயிக்கத்தக்க ஆரோக்கியத்தை தருகிறது.   
இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது இதனை ஒரு அதிசய மூலிகை என்று ஒத்துக்கொள்ள வேண்டும். 

தேனுடன் இலவங்கப் பட்டை கலந்து உண்டால் பல நோய்கள் குணமாகும். இந்தக் கலவை எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. தேனில்  இயற்கையாக இனிப்பு சத்து உள்ளதால் சரியான அளவில் எடுத்துக் கொண்டால், நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு கெடுதல் செய்யாது. (நீரிழிவு உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் உட்கொள்வது உத்தமம்).  


இலவங்கப்பட்டைப் பொடி
தேன் 



வீட்டில்  தேன் ஒரு பாட்டில் மற்றும் இலவங்கப் பட்டையை நன்றாக பொடி செய்து எப்பொழுதும் வைத்துக் கொள்ளவும். இனி இவை இரண்டும் நம் உடலுக்கு செய்யும் அற்புதங்களை பார்க்கலாம்.

நினைவாற்றல் பெருகும்

மூளையின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தரக்கூடிய நல்ல மருந்து, நரம்பு பதற்றம் மற்றும் நினைவாற்றலை பெருக்க  உதவுகிறது.

முகப் பொலிவடைய

முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால், மூன்று மேசைக் கரண்டி தேனுடன் இரண்டு மேசைக் கரண்டி இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்து, இரவு படுக்கும் முன் இந்தப் பேஸ்ட்டை பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளின் மேல் பூசி. காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும், தினசரி செய்து வர முகப் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவடையும்.


சொறி, படை மற்றும் வீக்கத்திற்கும் பூசலாம்.

உடலில் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறுவதை நிறுத்த இலவங்கப் பட்டை பொடியை காயத்தின் மீது போட்டால் இரத்தம் நிற்கும், தொடர்ந்து பொடியை காயத்தின் மேல் போட்டு வந்தால் காயம் விரைவில் தழும்பு இல்லாமல் ஆறும்.

முடி உதிர்வதை தவிர்க்கக் கூடியது

தலைக்கு தேய்க்கும் எண்ணையை காய்ச்சும் போது சிறிது இலவங்கப்பட்டையை சேர்த்து காய்ச்சினால் முடி உதிர்வது நிற்கும்.

வாய் மணக்க  

வாய் துர்நாற்றம் என்பது வயிற்றில் புண்கள் இருந்தால் ஏற்படக்கூடிய வியாதி. அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

தினமும் காலையில் தேனையும் இலவங்கப் பொடியையும் மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.

காது கேளாதவர்களுக்கு நற்செய்தி

தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சம அளவில் கலந்து காலை மற்றும் இரவு வேளைகளில் தினமும் சாப்பிட்டு வர இடையில் ஏற்பட்ட காது கேளாமை நீங்கும்.


மூட்டு வலிக்கு சிறந்த மருந்து 


மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி இலவங்கப் பொடியை கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும். காலை எழுந்தவுடன் இருக்கக்கூடிய மூட்டுவலி மற்றும் மூட்டு இறுக்கத்தை போக்கி மூட்டுக்களை எளிதாக இயங்கச் செய்கிறது. எவ்வளவு கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்.

மூட்டு வலி தவிர தசைவலி மற்றும் இறுக்கம் ஆகியவற்றை போக்க வல்லது.

எலும்புகளின் இணைப்பு திசுக்களை வலுவடைய செய்து இணைப்புகளில் ஏற்படும் வலியை போக்குகிறது .

சிறுநீர் கோளாறு தீர 


சிறுநீர் கோளாறுகளுக்கு இலவங்கப் பட்டை ஒரு சிறந்த மருந்து, இலவங்கப்பட்டை பொடியை தினசரி சிறிது அளவு உட்கொள்ளும் பொழுது சிறுநீரகங்கள் சீராக இயங்குகின்றன. சிறுநீர் பிரிவது இயல்பாக நடைபெறுகிறது.

வெது வெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி இலவங்கப் பட்டை பொடி, 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வர, 
சிறுநீரகப் பாதை மற்றும் சிறுநீர் குழாய்களில் உள்ள தொற்றுக் கிருமிகளை அழித்து விடும். 

கொழுப்பை உடலிலிருந்து அகற்ற

கெட்ட கொழுப்புகளை குறைக்கும்

கெட்ட கொழுப்புகளை குறைப்பதில், இலவங்கப் பட்டைப் பொடி சிறந்ததாகும், இப்பொடியை 1 தேக்கரண்டி உட்கொண்ட 2 மணி நேரத்திற்குள் சுமார் 20% கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றது. இதனை டீ-யுடன் சேர்த்து அருந்தும் போது 100% பயனளிக்கின்றது.

உடல் எடை குறைய

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் 2 மேசைக் கரண்டி தேனும் 3 மேசைக் கரண்டி இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை மற்றும் இரவு இந்தக் கலவையைக் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படி கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். மிகவும் பருமனான உடல் இருப்பவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் இருக்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட


எளிதில் ஜீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல்,
வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய், வயிற்றில் அல்சர்  போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் மசாலாவோடு இலவங்கப் பட்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்று நோயிலிருந்து நம்மை காக்கும். 

அசைவ உணவுகள் சமைக்கும் போது இலவங்கப் பட்டையை சேர்ப்பது வாசனைக்காக மட்டுமல்ல அந்த உணவில் உள்ள கொழுப்புச்சத்து உடலில் சேராமல் தடுக்கவும் எளிதில் ஜீரணமாகவும் தான் சேர்கிறார்கள். மேலும் 
2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி இலவங்கப் பொடி கலந்து உண்டு வர 
சாப்பிட்டவுடன் தோன்றும் நெஞ்செரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம்  தீரும்

ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் இந்த கலவையை சாப்பிட்டால் ஜீரணத்தை தூண்டி உணவை ஜீரணிக்க உதவும்.

சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து வயிற்று வலியுடன் சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இந்த கலவையை சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும். 

மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினை போக்க உதவும். 

ஜலதோஷம், இருமல், இரைப்பு 


ஒரு கப் சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனும் அத்துடன் 1/4 தேக்கரண்டி இலவங்கப் பொடியை கலந்து 3 வேளை காலை, மதியம், இரவு அருந்தினால் சைனஸ், சளி, இருமல் குணமாகும்.


ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஞ்சியுடன், இலவங்கப்பட்டை, கருப்பட்டி சேர்த்து கசாயமாக்கி கொடுக்கலாம், மேலும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு இந்த கசாயத்தை அருந்தலாம்.

குளிர் காற்று காரணமாக தலைவலிக்கு இலவங்கப்பட்டை தூளை தண்ணீர் கலந்து பசை போல் செய்து நெற்றிப்பொட்டு மற்றும் நெற்றியில் தடவுவதன் மூலம் குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் கடித்தல், கடிபட்ட இடத்தில் இலவங்கப்பட்டையை அரைத்து பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

நீரிழிவை குணப்படுத்தும்

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தினமும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி உட்கொண்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படும்.

இலவங்கப்பட்டை நம் உடலில் இயற்கையாக இன்சுலீன் உற்பத்தியையும் தூண்டும். இன்சுலினுக்கு சமமானது பட்டை.

இருதயத்தை காக்க இலவங்கப்பட்டை

இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இருதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை மற்றும் கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும்.

இருதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் கொழுப்பு அடைப்பதால் இருதயம் இயங்க தேவையான இரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது. இதை தான் மாரடைப்பு என்போம்,

தேன் மற்றும் இலவங்கப்பட்டைப் பொடி இரண்டையும் சம அளவு கலந்து தினசரி உண்பதால் இருதயக் 
குழாய்களில் இருக்கும்  கொழுப்பு கரைந்து இருதய அடைப்பு நீங்கி, இருதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு சுவாசமும் சீராகிறது மேலும் இருதய துடிப்பு பலப்பட்டு இருதயம் சீராக இயங்க உதவுகிறது,

ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிட்டு மறுபடியும் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நம் வயது ஏற ஏற இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன.

தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி சாப்பிடலாம். அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சட்டினி போல் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். 


இருதயநோய் உள்ளவர்களுக்கு இந்த தேனும் இலவங்கப்பட்டைப் பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெற தேனும் இலவங்கப்பட்டையும் உதவுகிறது .

இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் இலவங்கமும், செலவு குறைச்சல் தானே முயற்சி செய்யுங்களேன்

நோய் எதிர்ப்பு சக்தி


தேனில் இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் இலவங்கப் பொடியுடன் கலந்து தினசரி உண்டு வந்தால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மற்றும் வைரஸ் ஜுரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது,

ஆரோக்கியமான வாழ்கைக்கு

இலவங்கப் பட்டைப்  பொடி 1 தேக்கரண்டி 3 கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து டீ செய்யவும். ஒரு நாளில் கால் கப் வீதம், 3 அல்லது 4 முறையாக பருக: 


சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், வயதாவதையும் தடுக்கிறது.

இளமையிலேயே இந்த டீயை குடித்து வந்தால், நூறு வயதுவரை வாழலாம்.

வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் மற்றும் நோய் விளைவிக்கும் கிருமிகளுக்கு எதிரானது.


ஓட்ஸ், அசைவ உணவு வகைகள், காய்கறி பொரியல், உருளைக்கிழங்கு வருவல், டீ அல்லது காபி ஆகியவற்றின் மேல் இலவங்கப் பொடியை சேர்க்க உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

புற்று நோய்

வயிறு மற்றும் எலும்பில் உண்டாகும் புற்று நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் கூட ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இலவங்கப் பட்டை பொடி கலந்து தினமும் மூன்று வேளை என்று ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும்.

லுக்கேமியா மற்றும் லிம்ப்போமா புற்றுநோய் செல்களை (Leukemia and Lymphoma cancer cells) இது கட்டுப்படுத்துகிறது

இழந்த சக்தியை பெற 

வயதானவர்கள் மற்றும் நோயிலிருந்து மீண்டவர்கள்  உடலில் சக்தி குறைவாக இருக்கும் இழந்த சக்தியை  மீண்டும் பெற தினமும் காலை ஒரு கப் மிதமான வெந்நீரில் 1 தேக்கரண்டி தேனும் அரை 
தேக்கரண்டி இலவங்கப் பொடியையும் கலந்து குடிக்க வேண்டும்.
அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.
சிலருக்கு மதியம் ஒருவித அசதி ஏற்பட்டு பலவீனமாக உணர்வார்கள். அவர்களும் காலை மற்றும் மதியம் 3 மணிக்கு குடித்துவர, உடலில் தெம்பு ஏற்பட்டு ஒரே வாரத்தில் அசதி நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.

வயதானவர்கள் தேன், இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் சம அளவில் கலந்து தினமும் சாப்பிடுவதால், உடலாலும் மனதாலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

பெண்களுக்கான தீர்வு

இலவங்கப்பட்டைப் பொடியை தினசரி சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் நேரத்து உடல் உபாதைகளுக்கு நிவாரணம் வழங்குகிறது.
தாய் பால் சுரக்க செய்யும் தன்மை உண்டு.
இலவங்கப்பட்டை இயற்கையில் குழந்தைப் பிறப்பை தாமதப்படுத்த உதவும், குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட விரும்புகிறவர்கள் மாதவிடாய்க்கு பின்னர் இலவங்கப்பட்டைப் பொடியை 1 தேக்கரண்டி வெந்நீரில் கலந்து தினம் குடிக்க வேண்டும்.
பூஞ்சைக் காளான் பாதிப்பினால் ஏற்படும் நோய்களுக்கு இது அருமருந்தாக விளங்குகிறது.

குறிப்பு

காலை என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அது பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில், மதியம் என்பது சாப்பாட்டுக்கு முன் என்றும் இரவு என்றால் அது படுக்கைக்கு செல்லும் முன் என்றும் அர்த்தம்.

தேனை நேரடியாக அடுப்பில் அல்லது மைக்ரோ ஓவன்னில் வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும். அதனால் மீதமான சுடுநீரில் மட்டுமே இலவங்கப் பொடியை சேர்க்கவேண்டும்.


இயற்கையுடன் இணைந்து வாழும் போதும் இயற்கையில் கிடைக்கும் உணவுகளை உண்ணும்போதும் அது நம் உடலுக்கு தேவையான ஊட்டமும் பலமும் தந்து நம் உடலை நோய்கள் தாக்காத வகையில் காக்கிறது. 


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 


வாழ்க வளமுடன் 


1 கருத்து: