சனி, 16 ஜனவரி, 2021

வைட்டமின் பி12 குறைபாடு - Vitamin B12 Deficiency

வைட்டமின் பி12 குறைபாடு

எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமை, சின்னதாக ஒரு வேலையைச் செய்தால் கூட உடல் சோர்வு, கொஞ்ச தூரம் நடந்தாலே கை, கால் மூட்டுகளில் வலி, அடிக்கடி ஓய்வெடுக்கத் தூண்டும் மனநிலை  இது மாதிரியான அறிகுறிகள் இருந்தால் அதற்கு வைட்டமின் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். நம் உடலின் ரத்த உற்பத்திக்கும், மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 மிக அவசியம். வைட்டமின் பி12  நீரில் கரையக்கூடியவை.

வைட்டமின் பி 12 அசைவ உணவுகளில்தான் அதிகமாகக் கிடைக்கிறது.  காய்கறிகளில் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. எனவே, சைவ உணவுகள் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இந்தக் குறைபாடு கண்டிப்பாக ஏற்படும்.
நம் உடலின் செல்களிலிருக்கும் டி.என்.ஏ-க்கள் வேலை செய்வதற்கும், ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும் வைட்டமின் பி12 மிக மிக அவசியம். இது  நம் உடலின் வயிற்றுப் பகுதியில் இருந்துதான் உறிஞ்சப்படுகிறது. அதற்கு அமிலச் சுரப்பு (Acid secretion) அவசியத் தேவை.

யாருக்கெல்லாம் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்? 

சைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு, எடைக் குறைப்புக்காக அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, வாய்வுக் கோளாறு பிரச்னைகளுக்கு மாத்திரை, மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு, அதிகமாக விரதம் இருப்பவர்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படலாம். இது அதிகமாகும்போது `அனீமியா’ எனப்படும் ரத்தச்சோகைப் பிரச்னை, ஞாபகமறதி போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம்.

அறிகுறிகள் 

உடல் சோர்வு
• வாய்ப்புண்
• நாக்கு வெந்து சிவப்பாதல்
• தோல் தொடர்பான பிரச்னைகள்
• காதுகளில் சத்தம் வருதல்
• ரத்த சோகை
• நரம்பு மண்டலப் பாதிப்புகள் 
• கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, குறுகுறுப்பு போன்றவை.

இந்தக் குறைபாட்டை எப்படித் தடுக்கலாம்? 

மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாகக் கிடைக்கும். சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாபீன்ஸ், பால், தயிர், சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை, தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  `வைட்டமின் பி12 சேர்த்த உணவுகள்’ (Vitamin B12 foods) என்று பிரத்யேகமாகவே விற்கப்படுகின்றன. இவை தவிர வைட்டமின் பி12 சத்துகள் நிறைந்த மாத்திரைகள், மருந்துகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் வாங்கிச் சாப்பிடலாம். ஊசியாகவும் போட்டுக் கொள்ளலாம்.

வைட்டமின்கள், நம் உடலுக்குக் குறைபாடாகவும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில், தேவையை விட அதிகமாகவும் இருக்கக் கூடாது.   ஆனால், வைட்டமின் பி 12-ஐப் பொறுத்தவரை அந்தப் பிரச்சனையும் இல்லை. இது நீரில் கரையக்கூடியது என்பதால், தேவைக்கு அதிகமாகக் கிடைத்தாலும், உடலில் தங்காமல் சிறுநீர் மூலமாகவோ வியர்வை மூலமாகவோ எளிதாக வெளியேறிவிடும்.

வைட்டமின் பி12 குறைபாடு உடலில் என்ன செய்யும் 

  • வைட்டமின் பி12 குறைபாடு மஞ்சள் காமாலையினை ஏற்படுத்தலாம்.
  • மிக குறைந்த அளவு பி12  இருந்தால் சில வகை புற்று நோய் பாதிப்பிற்கான வாய்ப்புள்ளது.
  • சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் வைட்டமின் பி12 குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.
  • நெஞ்செரிச்சல் பாதிப்பு உடையவர்கள் அதற்கான மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்.
  • அதிக ஞாபக மறதி ஏற்படும். 
  • மூச்சுத்திணறல் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். 
  • நாக்கில் வீக்கத்தினைக் கொடுக்கும். இதனால் சாப்பிட, பேச கடினமாய் இருக்கும்.
  • கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வை கோளாறுகள் ஏற்படும்.
  • பி12 குறைபாடு தொடரும் பொழுது நடப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டு விழுந்து விடலாம்.
  • சருமம் பொலிவின்றி வெளிறிபோய் இருக்கலாம்.
  • பி12 குறைபாடு வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், பசியின்மை, எடை குறைதல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • உடலில் சோர்வு, தலைவலி, பலவீனம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

பெண்களுக்கு வைட்டமின் பி12 

எப்போதும் எலும்பு வலு குறித்த விஷயங்களில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு கூடுதல் சத்து தேவை. மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலங்களில் பாதிப்புக்குள்ளாக்கும் உறுப்புகளில் எலும்பும் ஒன்று.

மென்மையான எலும்பு, இடுப்பை சுற்றி எலும்பு வரை உண்டாகும் வலி போன்றவை உண்டாகும் என்றாலும் வழக்கத்தை விட தீவிரமாகும் போது இந்த பி12 வைட்டமின் பற்றாக்குறையாகவும் இருக்கலாம். இதை அலட்சியப்படுத்தும் போது எலும்புப்புரை வரை பாதிப்பை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவ உதவியுடன் பி12 எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும்.

50 வயதினைத் தாண்டியவர்களுக்கு வயிற்றில் ஆசிட் சுரப்பது குறைந்து இருக்கும். வயிற்றில் ஆசிட் பி12 சத்தினை உறிஞ்சிக் கொள்வதற்குத் தேவையாகின்றது. எனவே 50 வயதினைத் தாண்டியவர்களுக்கு திரிபலா சூரணம் பலனளிக்கும்.
மருத்துவர் ஆலோசனைப் பெற்று சாப்பிடவும்.

நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்! 

ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டமான  உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும்.

வைட்டமின் பி12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு, நரம்பில் வலி எனக் கொடுத்துவிடும்.

உணவு, பசிக்காக  ருசிக்காக மட்டுமல்ல. உடலுக்குத் திறனை உருவாக்க கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது இது. எனவே, காய், கனி, கீரைகளை, தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் மீது அலாதிப் பிரியம் வைப்போம். நம் தாத்தா-பாட்டி செய்து தந்த உணவு வகைகளை, புதுப்பொலிவுடன்  செய்து பரிமாறிடுவோம். 

நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம் 

* கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது. பால், முட்டையில் குறைவாக இருக்கிறது. பிற காய்கறிகளில் பி 12 இல்லை. இதனால்தான், தீவிர சைவ உணவாளர்களுக்கு பெர்னீஷியஸ் அனீமியா நோய் வர வாய்ப்பு அதிகம். அதற்கான அறிகுறிகள், கை, கால் எரிச்சல், வலி. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, இவர்கள் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

* நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய ‘அல்சீமர் நோய்’ எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வரமல் இருக்க வேண்டுமா? 40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

* பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளுக்கு நல்லது. 

* இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்பு வலுப்பெற உதவும். 

* தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும். 

* நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.

* வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப் பொடியை 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து இரவில் 45 நாட்கள் சாப்பிடவும்.

* ஓரிதழ் தாமரைப் பொடி, பூனைக்காலிப் பொடி நரம்பை வலுப்படுத்தும் நரம்பு சம்பந்தப்பட்ட அத்தனை வலியையும் நீக்கும். மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடுவது பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல நரம்பு நோய்களை ஆரம்பநிலையிலேயே களைந்துவிடும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் தேவையானது ஆகும். நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. நரம்புகள் நலம் பெற நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், யோகா பெரிதும் உதவும், மேலும் நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஒரு செயல்பாடாகும்.

அசைவ உணவுமுறையில் வைட்டமின் B12 நிறைந்திருக்கும் உணவுகள் 
  • பால் மற்றும் க்ரீம், பாலாடைக் கட்டி மற்றும் பால் பொருட்கள்
  • முட்டைகள்
  • வஞ்சிரம், ஆற்று மீன், சாளை மீன் அல்லது சூரை மீன் போன்ற மீன்கள்
  • இறால்
  • நத்தை
  • சிப்பி உணவு
  • பன்றி இறைச்சி
  • ஈரல்
  • கோழி கறி
  • இறைச்சி
சைவ உணவுமுறையில் வைட்டமின் B12 நிறைந்திருக்கும் உணவுகள் 
  • பாதாம் உணவுகள்
  • சோயா உணவுகள்
  • தேங்காய் பால்
  • ஈஸ்ட்
  • செறிவூட்டப்பட்ட காலை உணவு ஊட்டச்சத்து பானங்கள்
  • கீரைகள் மற்றும் கோஸ்கள் போன்ற பச்சை இலை காய்கறிகள்
  • பால், தயிர்  (பால் ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்க்கவும்.

வைட்டமின் பி12 நீரில் கரையும் தன்மையுள்ளது     உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும்

நரம்புகள் வலுப்பெற உதவும் உணவுகள்! 

ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டமான  உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், `பெர்னீஷியஸ் அனீமியா’ (Pernicious Anemia) எனும் ரத்தத்தையும் நரம்பையும் பாதிக்கும் நோய் நிச்சயம் வரும்.

வைட்டமின் பி12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு, நரம்பில் வலி எனக் கொடுத்துவிடும்.

உணவு, பசிக்காக  ருசிக்காக மட்டுமல்ல. உடலுக்குத் திறனை உருவாக்க கூடியவரை நோயில்லா நல்வாழ்வு பெற்றிட உதவும் அமுது இது. எனவே, காய், கனி, கீரைகளை, தினை, ராகி, குதிரைவாலி முதலிய சிறுதானியங்கள் மீது அலாதிப் பிரியம் வைப்போம். நம் தாத்தா-பாட்டி செய்து தந்த உணவு வகைகளை, புதுப்பொலிவுடன்  செய்து பரிமாறிடுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக